புதிய சென்னையின் முதல் மேயர்
13:18 Edit This 0 Comments »விரிவாக்கப்பட்ட சென்னை மாநகராட்சியின் முதல் மேயராக சைதை துரைசாமி, முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் செவ்வாய்க்கிழமை பதவியேற்றார்.சென்னை மாநகராட்சி மேயர், மாமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழாவையொட்டி ரிப்பன் மாளிகை விழாக் கோலம் பூண்டிருந்தது. ரிப்பன் மாளிகை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு எழிலுடன் காட்சியளித்து.பதவியேற்பு நிகழ்ச்சியையும், முதல்வர் ஜெயலலிதாவையும் காண்பதற்கு பொதுமக்கள் கொட்டும் மழையையும் பொருள்படுத்தாமல் காத்திருந்தனர்.முதல்வர் ஜெயலலிதா காலை 10.50 மணிக்கு ரிப்பன் மாளிகைக்கு வந்தார்.மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், மேயர் சைதை துரைசாமி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து அவரை வரவேற்றனர்.தனி மேடை: மன்றக் கூடத்தில் மேயர் இருக்கைக்கு அருகில் இடதுபுறம் தனி மேடை அமைக்கப்பட்டு அதில் முதல்வர் ஜெயலலிதா அமர இருக்கை போடப்பட்டிருந்தது. மன்றக் கூடத்தினுள் 10.55 மணிக்கு வந்த முதல்வர் ஜெயலலிதா தனது இருக்கையில் அமர்ந்தார். அவர் மன்றக் கூடத்துக்குள் வந்தபோது அ.தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரும் வாழ்த்து முழக்கம் எழுப்பினர். அருகில் போடப்பட்டிருந்த இருக்கைகளில் சட்டப் பேரவைத் தலைவர் ஜெயகுமார், அமைச்சர்கள் ஓ. பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன், கே.பி. முனுசாமி, ஜி.செந்தமிழன், கோகுல இந்திரா, பி.வி.ரமணா ஆகியோர் அமர்ந்தனர்.மேயர் இருக்கைக்கு வலதுபுறம் இருந்த இருக்கைகளில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சேதுராமன், ஷேக் தாவூத், அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாலகங்கா, தம்பிதுரை, ரபி பெர்னார்ட், வா.மைத்ரேயன், சட்டப் பேரவை உறுப்பினர்கள் வெற்றிவேல், மாதவரம் மூர்த்தி, குப்பன், கலைராஜன், ராஜலட்சுமி, காவல்துறை உயர் அதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகள் பலரும் அமர்ந்திருந்தனர். மேயருக்கான கருப்பு அங்கி, 18 பவுன் தங்கச் சங்கிலி ஆகியவற்றை அணிந்திருந்த சைதை துரைசாமி அனைவரையும் வரவேற்று மேயர் இருக்கையில் அமர்ந்தார்.ஆணையர் கார்த்திகேயன் பதவியேற்பு குறித்த முன்னறிவிப்பு செய்தார். பின்னர் ஆணையர் கார்த்திகேயன் பதவிப் பிரமாணம் செய்து வைக்க சைதை துரைசாமி பதவியேற்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.முதல்வர் ஜெயலலிதா அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். அதன் பிறகு கவுன்சிலர்கள் வார்டு வரிசைப்படி உறுதிமொழியைப் படித்து பதவி ஏற்றுக்கொண்டனர். ஒவ்வொருவருக்கும் ஆணையர் கார்த்திகேயன் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். அவர்கள் பதவி ஏற்கும் முன்பு முதல்வர் ஜெயலலிதாவை வணங்கிவிட்டு பதவி ஏற்பு உறுதிமொழியை வாசித்தனர். 6 பேர் பதவி ஏற்றுக்கொண்ட பிறகு 7-வதாக கவுன்சிலர் தனரமேஷ் பதவி ஏற்கும்போது 11.05 மணியளவில் முதல்வர் ஜெயலலிதா ரிப்பன் மாளிகையிலிருந்து புறப்பட்டுச் சென்றார். அவரை மேயர் சைதை துரைசாமி, ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் வாயில் வரை சென்று வழியனுப்பி வைத்தனர். தேநீர் இடைவேளைக்குப் பிறகு 11.20 மணியளவில் மீண்டும் கவுன்சிலர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி தொடங்கி தொடர்ந்து பகல் 1.30 மணி வரை நடந்து முடிந்தது. இதில் 5-வது வார்டு உறுப்பினர் கே.பி.சங்கர் தவிர தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த கவுன்சிலர்கள் உள்பட 199 பேர் பதவி ஏற்றனர்.முதல் மேயர்: விரிவாக்கப்பட்ட சென்னை மாநராட்சியின் முதல் மேயராக சைதை துரைசாமி பதவியேற்றதும் 2 முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டார். போர்க்கால அடிப்படையில் குப்பைகள் அகற்றப்படும் என்றும் வட்டம்தோறும் புகார்கள் பெறப்படும் என்றும் அவர் அறிவித்தார்.சென்னை மேயர் பதவியேற்றதைப் போலவே மற்ற 9 மாநகராட்சியின் மேயர்களும் செவ்வாய்க்கிழமை பதவியேற்றுக் கொண்டனர்.10 மேயர்கள், 124 நகராட்சித் தலைவர்கள் பதவியேற்புதமிழகம் முழுவதும் 10 மேயர்கள், 124 நகராட்சித் தலைவர்கள் உள்ளிட்ட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் செவ்வாய்க்கிழமை பதவியேற்றனர். சென்னை மாநகர மேயராக சைதை துரைசாமி பதவியேற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா கலந்துகொண்டார்.மதுரையில் ராஜன் செல்லப்பா, நெல்லையில் விஜிலா சத்தியானந்த், ஈரோட்டில் மல்லிகா பரமசிவம், தூத்துக்குடியில் சசிகலா புஷ்பா, திருச்சியில் எம்.எஸ்.ஆர்.ஜெயா, வேலூரில் கார்த்தியாயினி,திருப்பூரில் விசாலாட்சி, கோவையில் செ.ம.வேலுசாமி, சேலத்தில் சவுண்டப்பன் ஆகியோர் மேயர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர். 10 மேயர்களும் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.நகராட்சித் தலைவர்கள்: 124 நகராட்சிகளின் தலைவர்களும் செவ்வாய்க்கிழமை பதவியேற்றனர். இதில் 89 பேர் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள். நகராட்சி ஆணையர்கள் அவர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தனர்.வெள்ளக்கோவில் நகராட்சித் தலைவர் பதவிக்கான வேட்பாளர் ஒருவர் மரணமடைந்ததால் அங்கு மட்டும் தேர்தல் நடைபெறவில்லை.மறைமுகத் தேர்தல்: அக்டோபர் 29-ம் தேதி காலை 9.30 மணியளவில் மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது. மாநகராட்சி துணை மேயர், நகராட்சி, பேரூராட்சித் துணைத் தலைவர்கள் என மொத்தம் 14,019 பதவியிடங்களுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது.நேரடித் தேர்தலைவிட இதில் கடும் போட்டி நிலவுகிறது. சுயேச்சை உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுக்க பல்வேறு கட்சியினரும் முயற்சித்து வருகின்றனர்.
பட்ஜெட் அறிவிப்புகள :
12:28 Edit This 0 Comments »* மாணவ, மாணவியர் பள்ளிகளில் இடைநிற்றலைக் குறைக்க 10, 11-ம் வகுப்பு படிப்போருக்கு ரூ.1500, 12-ம் வகுப்பு படிப்போருக்கு ரூ.2000 உதவித் தொகை வழங்கப்படும்.
* அடுத்த கல்வி ஆண்டில் இருந்து பள்ளிக் குழந்தைகளுக்கு 4 செட் சீருடைகள் வழங்கப்படும். 6-ம் வகுப்பும் அதற்கு மேலும் பயிலும் மாணவர்களுக்கு அரைக்கால் சட்டைக்குப் பதிலாக முழுக்கால் சட்டையும், மாணவியருக்கு பாவாடை, தாவணிக்குப் பதிலாக சல்வார் கமீசும் வழங்கப்படும்.
* அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு ஏற்கெனவே 4 நகரங்களில் உள்ள தலைமுனையங்கள் மறுபடி செயல்படத் தொடங்குவதுடன், மேலும் 16 மாவட்டங்களில் இந்த நிறுவனம் சார்பில் தலைமுனையங்கள் தொடங்கப்படும். இதுதவிர 11 மாவட்டங்களில் தனியார் தலைமுனையங்களுடன் ஒப்பந்தம் செய்து, ஒளிபரப்பு வசதிக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
* எம்.எல்.ஏ.க்களின் தொகுதி வளர்ச்சி நிதி ரூ.2 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
* அடுத்த 5 ஆண்டுகளில் விவசாயிகளின் தனிநபர் வருமானத்தை இரண்டு அல்லது மூன்று மடங்கு உயர்த்த திட்டங்கள் செயல்படுத்தப்படும். நடப்பாண்டில் உணவு உற்பத்தி 115 லட்சம் டன் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* சென்னையில் புறநகர் காவல்துறை ஆணையரகம், சென்னை மாநகர காவல் ஆணையரகத்துடன் ஒருங்கிணைத்து சென்னை பெருநகர காவல் ஆணையரகமாக உருவாக்கப்படவுள்ளது.
* சென்னை நகருக்கு எதிர்கால குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய சென்னைக்கு அருகே புதிதாக 3 ஏரிகள் உருவாக்குவதுடன், மேலும் சில ஏரிகளை சீரமைத்து நகருக்கு குடிநீர் சப்ளையை அதிகரிக்க ஏற்பாடு செய்யப்படும்.
* ஆவின் மூலமாக 155 நடமாடும் கால்நடை மருத்துவமனைகள் தொடங்கப்பட்டு, 10 கி.மீ. சுற்றளவுக்கு கால்நடை மருத்துவ வசதி அளிக்கப்படும்.
பிளாஸ்டிக் கழிவில் சாலை அமைக்க ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* 104 அணைகள் ரூ.745 கோடியில் புனரமைக்கப்படும்.
மோட்டார் வாகனங்கள், உதிரி பாகங்கள் தயாரித்தல், உயிரி தொழில்நுட்பம், மருந்து துறை ஆகியவற்றுக்கென புதிய தொழில் கொள்கை 2011 உருவாக்கப்படும்.
* சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகளுக்கு மூன்று சதவீத வட்டி தள்ளுபடியில் கடன் வழங்கப்படும்.
மாநிலத்தில் புதிதாக 10 புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படும்.
* நிலங்களை ஒருங்கிணைத்து அனைவரும் பயன்களை பகிர்ந்து கொள்ளும் வகையில், புதிய நில எடுப்புக் கொள்கை உருவாக்கப்படும். திருக்கோயில் அன்னதானத் திட்டம் மேலும் 106 கோவில்களுக்கு விஸ்தரிக்கப்படுகிறது.
* திருச்சி அண்ணல் காந்தி அரசு மருத்துவமனை ரூ.100 கோடியில் சிறப்பு சிகிச்சை மையமாக ஆக்கப்படும்.
கிராமப்புற இளம்பெண்களுக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படும்.
* விற்பனை வரி நிலுவை, பத்திரப் பதிவுக் கட்டண நிலுவையை வசூலிக்க ""சமாதான் திட்டங்கள்'' தொடங்கப்படும். 2012 மார்ச் வரை இத் திட்டம் இருக்கும்.
* வணிகர் நல வாரிய உறுப்பினராக ஆண்டுதோறும் வணிகர்கள் புதுப்பிப்பதற்குப் பதிலாக ரூ.500 செலுத்தி ஆயுள்கால உறுப்பினராக பதிவு செய்து கொள்ளலாம். மதிப்புகூட்டு வரியில் விலக்கு அளிக்கப்பட்ட சிறு குறு வணிகர்களையும் வாரியத்தில் சேர்க்க அரசு ஆணையிட்டுள்ளது.
* மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்ய தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்படும்.
* முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50 ஆயிரமும், இரு பெண் குழந்தைகளாக இருந்தால் தலா ரூ.25 ஆயிரமும் வைப்புத் தொகை வழங்கப்படும்.
* போக்குவரத்துக் கழகங்களுக்கு கூடுதல் வருவாய் ஏற்படுத்த, தற்போது கணிசமாக நிலம் உள்ள பேருந்து நிலையங்களை, அரசு - தனியார் கூட்டு முயற்சியால் பேருந்து நிறுத்த வசதியுடன் அடுக்கக வணிக வளாகம் கட்டி மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
* நடப்பாண்டில் புதிதாக 3,000 பேருந்துகள் வாங்கப்படும்.
இலவச மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவையும், இலவச கறவை மாடு மற்றும் ஆடுகள் வழங்குவதும் செப்டம்பர் 15-ல் தொடங்கும்.
* உலமாக்கள் ஓய்வூதியம் ரூ.1000 ஆக உயர்த்தப்படுகிறது.

வரி விதிப்பு இல்லா உபரி பட்ஜெட்
12:23 Edit This 0 Comments »சென்னை, ஆக. 4: வரிவிதிப்பு ஏதும் இல்லாத உபரி பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தமிழக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்தார்.
திமுகவினர் இந்த பட்ஜெட் தாக்கலைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
அக்டோபர் மாதம் உள்ளாட்சித் தேர்தல், எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் டூ படிக்கும் மாணவ, மாணவியருக்கு ரொக்கமாக ஊக்கத் தொகை, எம்.எல்.ஏ.க்கள் தொகுதி வளர்ச்சி நிதி அதிகரிப்பு, அரசு கேபிள் டி.வி. செயலாக்கம், பஸ் நிலையங்களில் தனியார் ஒத்துழைப்புடன் வணிக வளாகங்கள் கட்டுதல் உள்ளிட்ட அறிவிப்புகள் இதில் வெளியாகியுள்ளன.
மாநில அரசுக்கான 2011-12-ம் ஆண்டிற்கான திருத்த வரவு செலவுத் திட்டத்தை பன்னீர்செல்வம் சமர்ப்பித்தார். ரூ.8,900 கோடிக்கு புதிய திட்டங்களையும், வளர்ச்சிக்கான திட்டங்களையும் அமைச்சர் அறிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, நடப்பு நிதி ஆண்டுக்கான திருத்திய வரவு செலவுத் திட்டத்தை அதிமுக அரசு இப்போது சமர்ப்பித்துள்ளது.
தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டங்களைச் செயல்படுத்துவது, அவற்றுக்கான நிதி ஒதுக்கீடு ஆகிய தகவல்கள் இந்த பட்ஜெட் உரையில் இடம் பெற்றுள்ளன.
புதிதாக வரி விதிப்பு பற்றியோ, வரி விலக்கு அளிப்பது பற்றியோ எந்த அறிவிப்பும் இந்த உரையில் இடம் பெறவில்லை.
நடப்பு நிதியாண்டில் ரூ.173.87 கோடி உபரி வருவாய் வரும் எனவும், நிதிப் பற்றாக்குறை ரூ.16,881 கோடியாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலதனத் திட்டங்களுக்கான நிதி ரூ.15,877.58 கோடியாக ஒதுக்கப்படுகிறது. நிதிப் பற்றாக்குறையை ஈடு செய்ய நடப்பு நிதியாண்டில் பெறப்படும் நிகரக் கடன் ரூ.17,261 கோடியாக இருக்கும். எனவே ஆண்டின் இறுதியில் அரசுக்கு மொத்தக் கடன் ரூ.1,18,610 கோடியாக இருக்கும்.

மெட்ரிக் பள்ளிகளுக்கு சமச்சீர்கல்வி புத்தகங்கள் திங்கள் முதல் வினியோகம்
21:35 Edit This 0 Comments »மதுரை : மெட்ரிக் பள்ளிகளுக்கு 1 மற்றும் 6ம் வகுப்பு சமச்சீர் கல்வி புத்தகங்கள் திங்கள் முதல் வினியோகிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் சமச்சீர் கல்வியை 1 மற்றும் 6ம் வகுப்பு தொடர்ந்து நடத்தலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து அரசு, உதவிபெறும் பள்ளிகளுக்கு அப்புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. சர்ச்சைக்குரிய செம்மொழி மாநாடு முத்திரை உட்பட சில பகுதிகளை கிழித்தோ, ஸ்டிக்கரால் மறைத்தோ மாணவர்களுக்கு வழங்குகின்றனர். அதேசமயம் ஆங்கில வழி கல்வி நடக்கும் மெட்ரிக் பள்ளிகளுக்கு புத்தகம் வினியோகிக்க தடை செய்யப்பட்டது. அரசின் வாய்மொழி உத்தரவால் புத்தகம் வினியோகிக்கவில்லை. இந்நிலையில் அப்பள்ளிகளுக்கும் புத்தகம் வினியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி மெட்ரிக் பள்ளிகள் 1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு தேவையான புத்தக எண்ணிக்கையை தங்களுக்கு அருகில் உள்ள "நோடல் பாயின்ட்'டாக செயல்படும் மையங்களில் தெரிவித்து, மொத்த தொகையையும் டி.டி.,யாக வழங்க வேண்டும். 1ம் வகுப்புக்கு ரூ. 200, ஆறாம் வகுப்புக்கு ரூ. 250க்கு டி.டி., பெற்று வழங்கினால், வரும் திங்கள் முதல் புத்தகங்கள் வினியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கீகார பள்ளிகள் கணக்கெடுப்பு: இதற்கிடையே தனியார் பள்ளிகளில் பல அங்கீகாரம் இன்றி செயல்படுவதால் ஆண்டுதோறும் ஏதாவது பிரச்னை ஏற்பட்டுவிடுகிறது. பல பள்ளிகளில் மாணவர்கள் கடைசி நேரத்தில் தேர்வு எழுதச் செல்லும்போது பிரச்னை உருவாகிறது. இதனால் தேவையற்ற மனஉளைச்சல்கள் ஏற்படுகின்றன. இதைத் தவிர்க்க இப்போதே நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. இதுதொடர்பாக உளவுப் பிரிவு போலீசார் அங்கீகாரம் பெறாத பள்ளிகள் குறித்து விபரம் சேகரித்து வருகின்றனர். மாவட்ட கல்வி அலுவலர்கள், மெட்ரிக் ஆய்வாளர்கள், மாவட்ட துவக்கக் கல்வி அலுலகங்களுக்குச் சென்று பல்வேறு வகையான பள்ளிகள் குறித்து விபர சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக மீனவர்கள் விடுதலை
21:30 Edit This 0 Comments »புதுச்சேரி: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 23 பேர் திங்கட்கிழமை விடுதலை செய்யப்படுவர் என மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் பணீ நீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்று கூறினார்.
மரியம் பிச்சை விபத்து வழக்கு-ஆந்திர லாரி டிரைவர் சிக்கினார்-தீவிர விசாரணை
23:10 Edit This 0 Comments »சென்னை: தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மரியம் பிச்சை சாலை விபத்து வழக்கில், ஆந்திராவில் வைத்துப் பிடிபட்டுள்ள லாரி டிரைவர் ஷேக் ரகமதுல்லாவிடம் சிபிசிஐடி போலீஸார் சென்னையில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுற்றுச்சூழல் அமைச்சராக நியமிக்கப்பட்ட மரியம் பிச்சை, எம்.எல்.ஏ பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக திருச்சியிலிருந்து கார் மூலம் சென்னை புறப்பட்டார். வழியில் பாடாலூர் என்ற இடத்தில் அவரது கார் வந்தபோது கண்டெய்னர் லாரி ஒன்று அமைச்சரின் கார் மீது மோதியது. இதில் மரியம் பிச்சை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
வழக்கமாக இதுபோல விபத்துக்களில் சிக்கும் லாரிகளின் டிரைவர்கள், உடனடியாக லாரியை நிறுத்தி விட்டு தப்பி ஓடி விடுவார்கள் அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்திற்குப் போய் சரணடைவார்கள். ஆனால் இந்த விபத்தில் அப்படி எதுவும் நடக்கவில்லை. மாறாக சம்பந்தப்பட்ட லாரி டிரைவர் லாரியுடன் தப்பி விட்டார்.
இதனால் இது விபத்தா அல்லது சதிச் செயலா என்ற கேள்விகள் எழுந்தன. இதையடுத்து சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
சிபிசிஐடி போலீஸாரின் விசாரணையில் லாரியின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட லாரி ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்ததாகும். அந்த லாரியை அன்றைய தினம் ஓட்டி வந்தவர் விஜயவாடாவைச் சேர்ந்த ஷேக் ரகமதுல்லா ஆவார்.
அன்றைய தினம் தூத்துக்குடியில் ஜிப்சம் ஏற்றிக் கொண்டு வந்தபோது பாடாலூர் அருகே அமைச்சரின்கார் மீது மோதி விட்டார் ரகமதுல்லா. பின்னர் அவர் நேராக விஜயவாடா விரைந்தார். அங்கு தனது உரிமையாளரிடம் லாரியை ஒப்படைத்து நடந்ததைக் கூறினார்.
இதையடுத்து ரகமதுல்லாவை அவரது வீட்டில் போய் இருக்குமாறு கூறிய அவரது உரி்மையாளர், லாரியுடன் மேற்கு வங்கம் சென்று ஜிப்சத்தை இறக்கினார்.
இந்த நிலையில் போலீஸாருக்கு தகவல் கிடைத்து அவர்கள் ரகமதுல்லாவை பிடித்தனர். தற்போது அவரை சென்னைக்குக் கொண்டு வந்து விட்டனர். இங்குள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் வைத்து அவரிடம் கூடுதல் டிஜிபி அர்ச்சனா ராமசுந்தரம் மற்றும் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணைக்குப் பின்னர் விபத்து நடந்த இடத்திற்கு ரகமதுல்லாவை அழைத்துச் சென்று நேரில் விசாரணை நடத்தவும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் பிடிபட்டுள்ள லாரியும் தற்போது சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு வருகிறது. இதற்காக தனிப்படை போலீஸார் அங்கு விரைந்துள்ளனர்.
800 லாரிகள்
விபத்து நடைபெறுவதற்கு முன்பு வரை சம்பந்தப்பட்ட சாலையில் 800 லாரிகள் கடந்து சென்றதை போலீஸார், சோதனைச் சாவடி தகவல்கள் மூலம் தெரிந்து கொண்டனர்.
இதில், 127 லாரிகள் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவையாகும். கேரளாவைச் சேர்ந்தவை 4 மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த லாரிகள் 8 ஆகும்.
விபத்து நடந்த இடத்திற்கு முன்பு சமயபுரம் சோதனைச் சாவடியும், நடந்த இடத்தைத் தாண்டி திருமாந்துறை சோதனைச் சாவடியும் உள்ளன.
விபத்து நடந்த சமயத்தில் சமயபுரம் சோதனைச் சாவடியைத் தாண்டி எத்தனை வாகனங்கள் சென்றன என்பது குறித்து ஆராய்ந்தபோது இரண்டு ஆந்திர லாரிகள் போயிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து விசாரணை நடத்தியபோதுதான் ரகமத்துல்லா சிக்கினார். அவரைப் பிடித்து விசாரித்தபோது அவர் உண்மையை ஒப்புக் கொண்டு விட்டார்.
அவர் மீது தற்போது விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடியது, தடயத்தை அழிக்க முயற்சித்தது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராம்தேவின் ஊழலுக்கு எதிரான போராட்டம்.
11:51 Edit This 0 Comments »டெல்லி: பாபா ராம்தேவின் ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டத்திற்காக டெல்லி ராம்லீலா மைதானத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
டெல்லியில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், கூட்டங்கள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும் இடம்தான் ராம்லீலா மைதானம். ராம்லீலா நிகழச்சியும் இந்த மைதானத்தில்தான் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இங்குதான் தற்போது ராம்தேவி்ன் உண்ணாவிரதம் தொடங்கியுள்ளது.
கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் சதுர அடி பரப்பளவில் பிரமாண்ட பந்தல் போட்டு உண்ணாவிரதம் தொடங்கியுள்ளது. பந்தல் அலங்காரம் கண்களைப் பறிப்பதாக உள்ளது. வெயிலின் கொடுமையிலிருந்து தப்புவதற்காக பந்தலுக்கு உள்ளே கிட்டத்தட்ட5000 மின்விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளன. மேடையில் ஏர்கூலர்களும் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும் குடிநீருக்கு மக்கள் திண்டாடி விடக் கூடாது என்பதற்காக போர்வெல் போட்டு 650 குழாய்களையும் நிர்மானித்துள்ளனர்.
மேலும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வருவோரின் வசதிக்காக குளியல் அறைகள், கழிப்பறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 1000க்கும் மேற்பட் பாத்ரூம், டாய்லெட்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பெருமளவிலானோர் பல்வேறு இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் மூட்டை முடிச்சுகளுடன் நேற்றே ராம்லீலா மைதானத்தில் வந்து குவிந்து விட்டனர்.
உண்ணாவிரதம் இருப்போரின் உடல் நிலையைக் கண்காணிப்பதற்காக டாக்டர்கள் குழுவையும் ஏற்பாடு செய்துள்ளனர். கிட்டத்தட்ட 60 டாக்டர்கள் இந்தப் பணியில் ஈடுபடவுள்ளனர்.
போராட்டத்தில் குழுப்பம் வந்து விடாமல் தடுப்பதற்காக கண்காணிப்பு கேமராக்களையும் உண்ணாவிரதப் பந்தல் பகுதியில் பொருத்தியுள்ளனர்.
போராட்டத்தில் சமூ்க விரோதிகள் புகுந்து குழப்பம் விளைவித்து விடாமல் தடுப்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. மேலும் பாபாவின் ஆதரவாளர்களும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

தோடு அணிவதற்கு காரணம்
11:19 Edit This 0 Comments »
சென்னை: நீண்ட காலத்திற்குப் பின்னர் தான் காதில் சிறிய தோடு அணிவதற்கு காரணம் என்ன என்பதை முதல்வர் ஜெயலலிதா விளக்கினார்.தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு புதன்கிழமை பேட்டி அளிக்கும்போது அது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.கடந்த காலங்களில் ஒரு ஆபணரமும் அணியாமல் இருந்தீர்கள்.இப்போது காதில் மட்டும் சிறிய தோடு அணிந்துள்ளீர்களே என்ன காரணம்?எனக் கேட்டனர்.
இதற்கு ஜெயலலிதா அளித்த பதில் 1997 ஆம் ஆண்டுக்குப் பிறகு நான் எந்தவிதமான நகையையும் ஆபரணங்களையும் அணியவில்லை.இந்த முடிவு எனது கட்சியினருக்குப் பிடிக்கவில்லை.கடந்த பல ஆண்டு காலமாக எனது கட்சியினர் பல்வேறு சந்தர்ப்பங்களில் என்னைச் சந்திக்கும் போதெல்லாம் உங்களை இப்படிப் பார்ப்பதற்கு (நகைகள் அணியாமல்) எங்களுக்கு கஷ்டமாக இருக்கிறது.எனவே உங்களது முடிவை மாற்றிக் கொள்ளவேண்டும்.ஏதாவது நகை அணியவேண்டும்.யாரோ உங்களைப் பற்றி ஏதோ சொன்னார் என்பதற்காக நீங்கள் ஏன் இப்படி இருக்கவேண்டும்?உங்களை பழித்துப்பேசிய தி.மு.க.வினர் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.எனவே அவர்கள் ஏதோ சொன்னார்கள் என்பதற்காக நீங்கள் ஏன் இப்படி இருக்க வேண்டுமென்று அவ்வப்போது என்னை வற்புறுத்தி வந்தார்கள். ஆனாலும் இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.
தேர்தலில் வெற்றிபெற்றுவிட்டோம் என்ற அறிவிப்பு வந்ததும் அ.தி.மு.க.பெரிய பெரும்பான்மையோடு வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப்போகிறது என்ற செய்தி வந்ததும் பலர் அன்று வீட்டில் கூடிவிட்டார்கள் அப்போது கட்சியினர் என்னைப் பார்த்து நீங்கள் இப்போதாவது எங்களுக்காக உங்கள் முடிவை மாற்றிக்கொள்ளவேண்டுமென்றும் இப்போதாவது நீங்கள் ஆபரணம் அணியவில்லையென்றால் மண்ணெண்ணெய் ஊற்றி இங்கேயே தீக்குளிப்போம் என்றும் தெரிவித்தனர்.
எங்களுடைய கட்சியினர் சொன்னால் செய்து விடுவார்கள்.பல்வேறு காரணங்களுக்காக பல்வேறு சந்தர்ப்பங்களில் கட்சியினர் பலர் தீக்குளித்து மாண்டு போயிருக்கிறார்கள்.அவர்களைக் காப்பாற்றவும் முடியவில்லை.எனவே இது என்னை திகைப்படையச் செய்தது.மகிழ்ச்சிகரமான நேரத்தில் சந்தோஷத்தைக் கொண்டாட வேண்டிய நேரத்தில் இப்படியொரு காரணத்துக்காக ஒரு அசம்பாவிதம் நடந்துவிடக்கூடாது என்பதற்காக எனது முடிவை மாற்றிக்கொண்டு அவர்களுக்காக நான் காதில் தோடு அணிய ஆரம்பித்தேன்.
தினமணி
தினமணி
மக்களை திசை திருப்ப ஈழப் பிரச்சினையில் கருணாநிதி போட்ட 'டிராமா'-தயாநிதி மாறன் அம்பலம்!
18:51 Edit This 0 Comments »சென்னை: ஈழத்தில் போரை நிறுத்தக் கோரி திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்தது அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, மக்களை திசை திருப்புவதற்காக போட்ட நாடகம் என்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் கூறியதாக விக்கிலீக்ஸ் தகவல் கூறுகிறது.
விக்கிலீக்ஸிடமிருந்து தி ஹிந்து நாளிதழ் பெற்ற தகவலை செய்தியாக வெளியிட்டுள்ளது. அதில் தமிழக மக்களை பல்வேறு பிரச்சினைகளிலிருந்து திசை திருப்புவதற்காக அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி பல்வேறு நாடகங்களை அரங்கேற்றியதாக அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் தயாநிதி மாறன் பேசுகையில், கூறியதாக பரபரப்புத் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
அமைச்சர் மரியம் பிச்சை உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்
18:48 Edit This 0 Comments »திருச்சி : திருச்சி அடுத்த பாடாலூரில் நேற்று நடந்த சாலை விபத்தில் சுற்றுச்சூழல் அமைச்சர் மரியம் பிச்சை பலியானார். அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக அவரது உடல் திருச்சி சங்கிலியாண்டபுரம் மரியம் தியேட்டரில் பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது. பொது மக்கள் அஞ்சலி முடிந்த நிலையில் அங்கிருந்து முதலியார்சத்திரம், மேலப்புதூர், வழியாக பாலக்கரை என்.எம்.பள்ளிவாசலுக்கு மரியம்பிச்சையின் உடல் கொண்டு வரப்பட்டது. அங்கு இருக்கும் கபரஸ்தானில் மரியம் பிச்சையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
அ.தி.மு.க., வெற்றியை எந்த சக்தியாலும் தட்டிப்பறிக்க முடியாது: ஜெயலலிதா உறுதி
11:39 Edit This 0 Comments »சென்னை : ""எவ்வளவு பணத்தை கொட்டினாலும் மக்கள் மனதை வாங்க தி.மு.க.,வால் முடியாது. அ.தி.மு.க., வெற்றியை எந்த சக்தியாலும் தட்டிப்பறிக்க முடியாது,'' என, ஜெயலலிதா பேசினார்.
அ.தி.மு.க., வேட்பாளர் பழ.கருப்பையா (துறைமுகம்), ஜெயக்குமார் (ராயபுரம்), குப்பன் (திருவொற்றியூர்), வெற்றிவேல் (ஆர்.கே.நகர்), நீலகண்டன் (திரு.வி.க.,நகர்), மற்றும் பெரம்பூர் மார்க்சிஸ்ட் கம்யூ., வேட்பாளர் சவுந்தரராஜனை ஆதரித்து ஜெயலலிதா நேற்று வடசென்னை முழுவதும் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழகத்தை காப்பாற்றுங்கள் என்ற கோரிக்கையுடன், உங்கள் முன் வந்துள்ளேன். ஒரு குடும்ப ஆட்சியின் சர்வாதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க உங்களை நாடி வந்துள்ளேன். கடுமையான மின்வெட்டு, மணல் கொள்ளை, ரவுடியிசம், தமிழகத்தில் யாரும் எந்த தொழிலையும் சுதந்திரமாக செய்ய முடியாத நிலை, கள்ளச் சாராயம், கள்ள லாட்டரி என, அனைத்து சமூக விரோத தொழில்களும், தி.மு.க., ஆட்சியில் நடக்கிறது.இந்த அவலங்களிலிருந்து, இந்த தேர்தல் மூலம் தமிழகத்தை மக்கள் மீட்டெடுக்க வேண்டும். இப்போது மீட்க முடியாவிட்டால், எப்போதும் மீட்க முடியாது என்று நல்லோரின் மனசாட்சிகள் சொல்கின்றன. ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்தவர்களுக்கு, இந்த தேர்தலில் தகுந்த தண்டனை தர வேண்டும். தி.மு.க.,வினரின் ஊழல் சாம்ராஜ்யத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் அகற்ற வேண்டும்.
தமிழகத்தை ஒரு லட்சம் கோடி கடனுக்குள் சிக்கவைத்தது தான் கருணாநிதியின் சாதனை. மக்கள் பணத்தை பேராசை கொண்ட கும்பல் சுரண்டுகிறது. இதை தடுக்க தி.மு.க.,கூட்டணியினர் போட்டியிடும், அனைத்து இடங்களிலும் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் வகையில், அவர்களை டிபாசிட் இழக்க செய்ய வேண்டும்.இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடக்காத ஊழலை தி.மு.க.,வினர் நிகழ்த்தியுள்ளனர். ஊழலுக்கு நிகர் ஊழல் செய்பவர் கருணாநிதி. அவர் விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்வதில் வல்லவர் என, சர்க்காரியா கமிஷன் கூறியது.
தேர்தலில் தோற்பது உறுதி என, தெரிந்து கொண்ட தி.மு.க.,வினர் 234 தொகுதிகளிலும் மழையாக பணத்தை கொட்டியுள்ளனர். இந்த பணமழைக்கு அ.தி.மு.க., வேட்பாளர்களும், நிர்வாகிகளும், கூட்டணி கட்சியினரும் மலைத்து போகவோ, கலக்கமடையவோ வேண்டாம். எவ்வளவு பணத்தை கொட்டினாலும், மக்கள் மனதை வாங்க தி.மு.க.,வால் முடியாது. அ.தி.மு.க., வெற்றியை இம்முறை யாரும் தட்டிப்பறிக்க முடியாது.அ.தி.மு.க., ஆட்சி மீண்டும் அமைந்ததும் மக்களின் அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்படும். மீன் பிடிக்க தடைகாலத்தில் 2,000 ரூபாய் உதவித்தொகை, மீன்பிடிக்க இயலாத மழைக்கால உதவியாக 4,000 ரூபாய் வழங்கப்படும். மீனவர்கள் நலன் காக்கப்படும். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கப்படும். இதுகுறித்த வரைமுறைகளை ஆய்வு செய்து முடிவெடுக்க தனியே குழு அமைக்கப்படும். இன்னும் மக்களுக்கு என்னென்ன தேவைகள் உள்ளதோ அனைத்தும் செய்து தரப்படும்.இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.
தி.மு.க., மிரட்டல்: ஜெ.,திடுக் : "மதுரையில் தேர்தல் பணியில் ஈடுபடுவோர் தி.மு.க.,வினரால் மிரட்டப்படுகின்றனர். தமிழகம் முழுவதும் தி.மு.க.,வினரின் மிரட்டலால் தேர்தல் அதிகாரிகள் மத்தியில் அச்சத்தால், ஒரு வித பதட்டம் நிலவுகிறது. அவர்கள் நேர்மையாகவும், நியாயமாகவும் தேர்தல் பணியாற்றுவர். அவர்களுக்கு தேவையான பாதுகாப்பை தேர்தல் கமிஷன் தர வேண்டும்' என ஜெயலலிதா பேசினார்.
வடிவுடையம்மனை கும்பிட்ட ஜெ., : அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவின் இஷ்ட தெய்வம் திருவொற்றியூர் வடிவுடையம்மன். ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் இங்கு முக்கிய நபர்கள் வந்து சிறப்பு பூஜை செய்வது வழக்கம். டான்சி வழக்கில் அவரை சுப்ரீம் கோர்ட் விடுவித்த பத்தாவது நிமிடத்தில், வடிவுடையம்மன் கோவிலுக்கு பறந்து வந்து, அம்மனை தரிசித்தார். "கடவுளுக்கு நன்றி' என, அப்போது நிருபர்களிடம் கூறினார்.
இந்நிலையில், அ.தி.மு.க., வேட்பாளர் குப்பனை ஆதரித்து பிரசாரம் செய்ய வந்த ஜெயலலிதா, தேரடியில் வடிவுடையம்மன் கோவிலைப் பார்த்தவாறு பிரசாரம் செய்தார். இறுதியில், அம்மனை கையெடுத்து கும்பிட்டு தனது பிரசாரத்தை நிறைவு செய்தார்.திருவொற்றியூர் தொகுதியில் வெற்றி பெறும் அணி தான், ஆட்சியைப் பிடிக்கும் என்பது நம்பிக்கை; இதுவரை அப்படித்தான் நடந்துள்ளது என்பதால், ஜெ., அம்மனை வழிபட்டு பிரசாரம் செய்தது, அ.தி.மு.க.,வினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

என் "இமேஜை', "டேமேஜ்' செய்கின்றனர்: விஜயகாந்த்.
21:13 Edit This 0 Comments »பட்டுக்கோட்டை: "" அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, கேபிள் "டிவி' அரசுடமையாக்கப்படும் என்றதும், ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எனவே, என்னை குறிவைத்து என் இமேஜை டேமேஜ் செய்கின்றனர்,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.
தஞ்சை மாவட்டம், பேராவூரணியில் நடந்த கூட்டத்தில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசியதாவது: கடந்த உள்ளாட்சி தேர்தலின்போது கருணாநிதி, "லோக்சபா, சட்டசபை தேர்தலில் தேர்ந்தெடுத்தீர்கள். அதுபோல, உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுத்தால் உங்கள் தேவை அனைத்தையும் எங்களால் செய்துதர முடியும்' என்றார்.அப்படி கூறியவரால், ஏன் காவிரியில் நீரை பெற்றுத்தர முடியவில்லை. முல்லைப் பெரியாறு அணை உயரத்தை உயர்த்த நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடியவில்லை. கடந்த 2006ல் நடந்த தேர்தலில் நான் தனியாக நின்றதால் என்னை விமர்சித்து யாரும் பேசவில்லை. தேர்தல் அறிவிப்புக்கு முன், நான் பேரத்துக்கு கட்டுப்படாததால் தற்போது @வறு வழியில் இறங்கி விட்டனர் . அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, கேபிள் "டிவி' அரசுடமையாக்கப்படும் என்றதும், அதை ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் என்னைக் குறிவைத்து என் இமேஜை டேமேஜ் செய்கின்றனர். நீங்கள் செய்யும் ஊழல்களுக்கு எல்லாம் கட்டாயம் சிறை செல்லப்போவது உறுதி. அது உங்கள் கூட்டணி கட்சியினரால் (காங்கிரஸ்) நடக்கும். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற அதிமுகவுக்கு ஒரு சான்ஸ் கொடுங்க: நடிகர் ஆனந்த்ராஜ்
02:25 Edit This 0 Comments »தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற அதிமுகவுக்கு மக்கள் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று நடிகர் ஆனந்த்ராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
நேற்று வேடசந்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பழனிச்சாமியை ஆதரித்து நடிகர் ஆனந்த்ராஜ் திறந்த வேனில் பிரசாரம் செய்தார். அவர் வேடசந்தூர், எரியோடு, பூத்தாம்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது,
அதிமுக தேர்தல் அறிக்கையில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச கம்யூட்டர் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு்ள்ளது. அவர்கள் ஓட்டு போடுவார்கள் என்ற எதிர்பார்ப்பிலா ஜெயலலிதா அறிவித்துள்ளார். ஆனால் கருணாநிதியோ கல்லூரி மாணவர்கள் ஓட்டு போடுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் அவர்களுக்கு மட்டும் இலவச லேப்டாப் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார்.
திமுக தேர்தல் அறிக்கையில் தாய்மார்களுக்கு மிக்சி அல்லது கிரைண்டர் வழங்கப்படும் என்று தான் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜெயலலிதாவோ மிக்சி, கிரைண்டர் இரண்டும் வழங்கப்படும் என்று கூறியிருக்கிறார். மேலும், தாய்மார்கள் மிக்சி, கிரைண்டர் பயன்படுத்தும்போது வியர்க்காமல் இருக்க மின்விசிறியையும் சேர்த்து தருவதாக கூறியுள்ளார்.
அனைத்து தரப்பு மக்களின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு வெளியிடப்பட்டுள்ளது அதிமுக தேர்தல் அறிக்கை. எனவே, அனைவரும் அதிமுக வேட்பாளர் பழனிச்சாமிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். நாங்கள் வெற்றி பெற்ற பிறகு இதே இடத்தில் மேடை போட்டு நாங்கள் கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றார்.
வடிவேலு அடி வாங்குற நேரம் நெருங்கிடுச்சி: விந்தியா
02:22 Edit This 0 Comments »சினிமாவில் அடிவாங்கி காமெடி பண்ணும் வடிவேலு நிஜத்தில் அரசியலில் அடி வாங்குற நேரம் வந்துடுச்சி என்று நடிகை விந்தியா கூறியுள்ளார். அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நடிகை விந்தியா, வடிவேலுவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசி வருகிறார்.
நடிகர் வடிவேலு, விஜயகாந்தைப் பற்றி ஏக வசனத்தில் பேசி பிரசாரம் செய்து வருகிறார். அவரது பிரசாரத்தை கட்சி பாகுபாடு இல்லாமல் ஏராளமானோர் திரண்டு வந்து பார்த்து சிரிக்கிறார்கள். வடிவேலுவின் பிரசாரம் மக்களை எளிதில் சென்று வருவதாலோ என்னவோ ஆளும்கட்சி தொலைக்காட்சிகளில் வடிவேலு பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
இதுஒருபுறம் இருக்க, திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் வடிவேலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை விந்தியா பிரசாரத்தில் குதித்துள்ளார். நேற்று அவர் பிரசாரத்தின்போது பேசுகையில், வடிவேலு ஒரு காமெடி பீஸ். அவரால திமுகவும் இப்போ காமெடி பீஸா தெரியுது. திமுககிட்ட எவ்வளவு வாங்குனாரோ தெரியல. வாங்குனதுக்கு வஞ்சமில்லாம பேசிக்கிட்டு திரியறாரு. இவரு வந்து கேப்டனை ஒழிச்சிக் கட்டுவாராம். இதை விட மிகப் பெரிய காமெடி ஒண்ணுமே இல்லைங்க. சினிமாவில கூட இந்த மாதிரி காமெடியை நான் பார்த்ததில்லை. மக்களுக்கு நல்லது செய்ய அம்மாவுடன் சேர்ந்திருக்கிற நல்லவர் கேப்டன். கேப்டனின் லெக் கிக்; பஞ்ச் பவர் பற்றி தமிழ்நாட்டில் எல்லோருக்கும் தெரியும். பொதுவா சினிமாவில் வடிவேலு அடி வாங்கி அடி வாங்கித்தான் காமெடி பண்ணூவார். அவர் அரசியலில் இன்னும் அடிவாங்கல. இப்போ அதுக்கான நேரம் வந்துடுச்சி போலிருக்கு. அடி வாங்குறதுக்காகத்தான் இப்படி பேசுறாரு, என்றார்.
விஜயகாந்தை விமர்சிக்க வடிவேலுக்கு தகுதியில்லை! – சிங்கமுத்து ஆவேசம்
02:19 Edit This 0 Comments »திமுகவுக்கு ஆதரவாக அனல் பறக்கப் பேசி வரும் வடிவேலுவுக்கு எதிராக தேர்தல் பிரச்சாரத்தில் குதித்துள்ளார் காமெடி நடிகர் சிங்கமுத்து.
சினிமாவில் காமெடியில் இணைந்து கலக்கியவர்கள் நடிகர் வடிவேலுவும் சிங்கமுத்துவும். நிலம் வாங்கி விற்றதில் இருவரும் எதிரிகள் ஆனார்கள். வடிவேலுவை கோடிக்கணக்கில் சிங்கமுத்து மோசடி செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சிங்கமுத்து கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் இருந்தார். இப்போது ஜாமீனில் வெளி வந்துள்ளார்.
இந்த நிலையில் நடிகர் வடிவேலு தி.மு.க.வுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் குதித்தார். தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசிவரும் வடிவேலு, விஜயகாந்தை ஒவ்வொரு கூட்டத்திலும் வெளுத்து வாங்குகிறார்.
வடிவேலுக்கு எதிராக யார் யாரையோ களமிறக்கிப் பார்க்கிறது அதிமுக. நடிகை விந்தியா, நடிகர் ராதாரவி ஆகியோர் வடிவேலுவை மட்டும் குறி வைத்துத் தாக்கி வருகின்றனர். ஆனாலும் வடிவேலுவின் பேச்சுக்கு முன் எதுவும் எடுபடவில்லை என்பதே உண்மை.
எனவே, வடிவேலுவின் எதிரியான சிங்கமுத்துவை களம் இறக்கியுள்ளது அதிமுக. இது தொடர்பாக, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்தார் சிங்கமுத்து. உடனே அவரை பிரசார களத்தில் இறங்குமாறு அ.தி.மு.க. உத்தரவிட்டுள்ளது. 1989-லிருந்து சிங்கமுத்து அதிமுகவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று மாலை சென்னையில் தனது முதல் பிரச்சாரத்தைத் தொடங்கினார் சிங்கமுத்து. ஆயிரம் விளக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பா.வளர்மதியை ஆதரித்து கிரீம்ஸ் ரோட்டில் பிரசாரம் செய்தார்.
வடிவேலுக்கு பதிலடி கொடுக்க சிங்கமுத்து களம் இறங்கியதால் தேர்தல் பிரசார களம் சூடுபிடித்துள்ளது. இந்தப் பிரச்சாரத்தில் நடிகர் சிங்கமுத்து பேசுகையில், “திமுக ஆட்சியில் இதற்கு மேலும் துன்பப்பட முடியாது. எனவேதான் மாற்றத்தை ஏற்படுத்த தமிழக மக்கள் விரும்புகிறார்கள். விலைவாசி உயர்வு, மின் வெட்டால் மக்கள் அவதிப்படுகிறார்கள். புரட்சித் தலைவியால்தான் தமிழக மக்களைக் காப்பாற்ற முடியும்.
வுடிவேலு பற்றிப் பேசுவதே அசிங்கம்….
தி.மு.க.வினருக்கு மக்கள் மீது அக்கறை இல்லை. 2ஜி ஊழலிலிருந்து தப்பிப்பதுதான் அவர்கள் கவலை. புதிதாக ஒரு நடிகர் (வடிவேலு) வந்துள்ளார். அவரைப் பற்றி பேசுவதே அசிங்கம். விஜயகாந்த் சினிமாவில் சம்பாதித்து விட்டுத்தான் அரசியலுக்கு வந்துள்ளார். அவரைப்பற்றி இவர் விமர்சிக்கிறார்.
நிதானமில்லாமல் விஜயகாந்த் பேசுகிறாராம். நீ எப்பப்ப நிதானமாய் இருப்பாய் என்று எனக்குத்தானே தெரியும். கட்டிய வேட்டியோடு சென்னைக்கு வந்தாய். ஒரு சோப்பை நாலாக வெட்டி வேட்டியை துவைத்து கட்டினாய். விஜயகாந்தை பற்றி விமர்சிக்க உனக்கு எந்த தகுதியும் இல்லை. பா வளர்மதி எம்ஜிஆர் ஆசிபெற்றவர். அமைச்சராக இருந்தவர். ஒரு நல்ல வேட்பாளரை புரட்சித்தலைவி தந்துள்ளார். பா.வளர்மதியை வெற்றி பெற செய்யுங்கள்…”, என்றார்.இவ்வாறு அவர் பேசினார்.
வடிவேலுவோட இருந்தா செத்துருப்பேன்! சிங்கமுத்து உருக்கம்!!
02:15 Edit This 0 Comments »எனக்கும், வடிவேலுவுக்கும் சண்டை வரலைன்னாலும் நானே அங்கிருந்து விலகி வந்திருப்பேன். ஏன்னா, அவரோட மேனேஜர்கள் எல்லாரும் வரிசையா செத்துக்கிட்டே இருந்தாங்க. இப்பகூட அவரோட நடிச்ச நடிகை ஒருவர் இறந்துட்டாரு. நானும் அவர் கூட இருந்திருந்தா செத்துருப்பேன் என்று நடிகர் சிங்கமுத்து தேர்தல் பிரசாரத்தில் உருக்கமாக கூறி வருகிறார்.
திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் களமிறங்கி எதிர்க்கட்சியினரை… குறிப்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்தை லெப்ட் ரைட் வாங்கிக் கொண்டிருக்கிறார் காமெடி நடிகர் வடிவேலு. வடிவேலுவின் அனல் கக்கும் காமெடி பிரசாரத்துக்கு எதிராக நடிகை விந்தியாவை களமிறக்கியது அதிமுக. ஆனாலும் அவரது பேச்செல்லாம் வடிவேலுவின் மாஸ் பேச்சில் எடுபடாமல் போனது. இதனால் வடிவேலுக்கு எதிராக பேசும் நேரடி சக்தியாக இருக்கும் காமெடி நடிகர் சிங்கமுத்துவை நாடியது அதிமுக. போயஸ் கார்டனில் இருந்து அழைப்பு வந்ததும் ஓடிப்போய் ஜெயலலிதாவை பார்த்த சிங்கமுத்து, அடுத்த கனமே பிரசார களம் இறங்கினார்.
வடிவேலு தன் பிரசாரத்தின்போது பெரும்பாலும் விஜயகாந்தை நைய புடைத்து வருவது போலவே, சிங்கமுத்து தன் பிரசாரத்தில் வடிவேலுவை நைய புடைக்க ஆரம்பித்து விட்டார். என்னவொரு வித்தியாசம் என்றால் வடிவேலுவின் பிரசாரம் காமெடி ரகம்; சிங்கமுத்துவின் பிரசாரம் சீரியஸ் ரகம். சென்னையில் நடந்த பிரசாரத்தில் சிங்கமுத்து பேசுகையில், புதிதாக ஒரு நடிகர் (வடிவேலு) வந்துள்ளார். அவரைப் பற்றி பேசுவதே அசிங்கம். விஜயகாந்த் சினிமாவில் சம்பாதித்து விட்டுத்தான் அரசியலுக்கு வந்துள்ளார். அவரைப்பற்றி இவர் விமர்சிக்கிறார். நிதானமில்லாமல் விஜயகாந்த் பேசுகிறாராம். நீ எப்பப்ப நிதானமாய் இருப்பாய் என்று எனக்குத்தானே தெரியும். கட்டிய வேட்டியோடு சென்னைக்கு வந்தாய். ஒரு சோப்பை நாலாக வெட்டி வேட்டியை துவைத்து கட்டினாய். விஜயகாந்தை பற்றி விமர்சிக்க உனக்கு எந்த தகுதியும் இல்லை, என்றார்.
இன்னொரு இடத்தில் சிங்கமுத்து பேசும்போது, வடிவேலு பேசுறதெல்லாம் நானும் பார்த்துகிட்டுதான் இருக்கேன். என்னத்தை சொல்றது? சொந்த பிரச்சனையை மனசுல வச்சுகிட்டு பேசுறது சரியா, நீங்களே சொல்லுங்க. அவருக்கும் விஜயகாந்துக்கும் ஏதோ பிரச்சனை. அதுக்காக திமுக மேடையை பயன்படுத்துறார்னுதான் தோணுது. அப்படியே பேசினாலும், ஒரே துறையில இருக்கிற அவரை இவ்வளவு தரம் தாழ்ந்து விமர்சிக்கறது சரியா படலை. அதுவும் அவரு விஜயகாந்த்தை அந்த பீஸ, இந்த பீஸ் என்று சொல்றதையெல்லாம் கேட்கவே கஷ்டமாதான் இருக்கு. எனக்கும் அவருக்கும் சண்டை வரலைன்னாலும் நானே அங்கிருந்து விலகி வந்திருப்பேன். ஏன்னா, அவரோட மேனேஜர்கள் எல்லாரும் வரிசையா செத்துக்கிட்டே இருந்தாங்க. இப்ப கூட அவரோட நடிச்ச நடிகை ஒருவர் இறந்துட்டாரு. அந்தளவுக்கு பவர்ஃபுல் ஜாதகம் அவருக்கு. ஜாதகம்னு சொன்னதும்தான் ஞாபகம் வருது. இந்தாளுக்கு இப்ப பாத சனி நடக்குது. ஒரு வழி பண்ணாம விடாது. தப்பு தப்பாதான் பேச சொல்லும். நடக்க சொல்லும். போக போக எல்லாரும் பார்க்கதானே போறீங்க. நான் இப்போது முப்பதைந்து படத்துல நடிச்சுகிட்டு இருக்கேன். வடிவேலுவுக்கு ஒரு படம் கூட இல்லை. அதான் நேரம்ங்கிறது, என்றார்.
கசக்கும் உண்மைகளும், சில நகைச்சுவைகளும் : நெல்லைக்கண்ணன் All tamilars must read it.
00:24 Edit This 0 Comments »உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேல், காந்தியின் பாதுகாப்பிற்காக ராணுவத்தை அனுப்பி வைத்தார். காந்தியை தொடர்ந்து கலெக்டரும், ராணுவமும் போகின்றனர். கலெக்டரிடம் காந்தியடிகள் கேட்கிறார், "எதற்காக ராணுவம்?' கலெக்டரும், "உங்கள் பாதுகாப்பிற்காக' என்கிறார். "என் நாட்டு மக்களிடம் போகிறேன். அதற்கு எனக்கு பாதுகாப்பா? உடனடியாக ராணுவத்தை திருப்பி அனுப்புங்கள்' என்று அங்கேயே நின்று விட்டார். ராணுவம் திருப்பி அனுப்பப்பட்ட பிறகு தான் காந்தியடிகள் நவகாளிக்குள் சென்றார்.
திருநெல்வேலியில் பொதுக்கூட்டம் பேச, ஈ.வெ.ரா., வருகிறார். வயது 93. ஒரு குறிப்பிட்ட இனத்தவரை ஏதோ தவறுதலாக சொல்லி விட்டார் என்று, மதுரையில் அவரது கூட்டத்தில் தகராறு. ஆகவே, திருநெல்வேலியில் ஆபத்து ஏற்படும் என கருதிய முதல்வர் கருணாநிதி அரசு, கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தது.
ஏராளமான காவலர்கள், அதிகாரிகள், ஈ.வெ.ரா., பேசுகிற இடத்திற்கு பின்னால் இருந்த ஓர் அரண்மனையில், நீதிபதியே வந்து அமர்ந்திருந்தார். துப்பாக்கிச் சூடு உத்தரவு தருவதற்காக. அந்த சிங்கம் மேடைக்கு வந்தவுடன், "எல்லா போலீஸ்காரங்களும் உடனே போயிருங்க. நீதிபதி அய்யா அவர்களையும் நான் கேட்டுக்கறேன்.
நீங்களும் போயிருங்க. யாருக்காக பாடுபடறேனோ, அவங்களே என்னை கொல்லப் போறாங்கன்னா கொல்லட்டும்' என்றார். பாதுகாப்பிற்காக வந்த அத்தனை காவலர் படையும் போன பின்னர், நீதிபதியும் போன பின்னரே ஈ.வெ.ரா., பேசினார்.
காமராஜர் முதல்வராகி வெளியில் கிளம்புகிறார். அவருக்கு முன், காவல் அதிகாரிகள் ஒரு காரில் சங்கு ஒலிக்க கிளம்புகின்றனர். காமராஜர், தனது உதவியாளரை விட்டு, அவர்களை கூப்பிட்டார். "எதுக்கு சங்குன்னேன்? நான் உயிரோடு தானே இருக்கேன்'.
"அய்யா பாதுகாப்பிற்காக' என்று பதில் தருகின்றனர். "அவங்க தானே என்னை முதல்வராக்கி இருக்கின்றனர். அவங்க மத்தியிலேயே இந்த பந்தாவெல்லாம் வேண்டாம். போங்க போங்க... வேற வேலை ஏதாவது இருந்தா பாருங்க' என்றார்.
இன்று மத்திய அமைச்சர் அழகிரி வீட்டின் பாதுகாப்பு தேர்தல் கமிஷனால் குறைக்கப்பட்டவுடன் அவர் கூறுகிறார். "எனக்கு ஏதேனும் ஆபத்து என்றால் தேர்தல் கமிஷன் தான் பொறுப்பு' என்கிறார்.
அப்படியென்றால், "200 இடங்களில் வெற்றி பெறுவோம்' என அதே அழகிரி சொல்வது எப்படி உண்மையாக இருக்க முடியும்? 200 இடங்களிலே வெற்றி என்றால், மக்கள் அவர்கள் பக்கம் தானே. பிறகு எதற்கு பாதுகாப்பு?
நகைச்சுவைகள்: திரைப்பட நடிகைகள், நடிகர்கள் தேர்தலில் பேசுகின்றனர். கற்பை கொச்சைப்படுத்தி ராமதாசாலும், திருமாவளவனாலும் கடுமையாக தமிழுணர்வோடு கண்டிக்கப்பட்டு, நீதிமன்றங்களிலும் நிறுத்தப்பட்ட குஷ்பு, தி.மு.க.,விற்கு ஓட்டளித்தால், நமக்கு அவரை போலவே குழந்தை பிறக்கும் என உத்தரவாதம் அளிக்கிறார். இன்றும், பா.ம.க., தலைவர் மணி போட்டியிடும் மேட்டூர் நீதிமன்றத்தில் குஷ்பு மீது, கற்பு வழக்கு நிலுவையில் இருக்கிறது.
"முதல்வர் கருணாநிதி பெரிய ராஜதந்திரி' என்று இளங்கோவன் சொல்கிறார். தேர்தலுக்கு முன், "தி.மு.க.,வோடு கூட்டணியே கூடாது' என்று, பெரிய அறிக்கைகளில் வாழ்ந்து கொண்டிருந்தாரே... அவரே தான்.
அதை விடச் சிறப்பு, அவர் தந்தை சம்பத் எம்.பி.,யாக தி.மு.க.,வினரால் தேர்ந்தெடுக்கப்பட்டு, பரந்துபட்ட அரசியலை டில்லியில் பார்த்து, காங்கிரசில் இணைந்தவுடன், கருணாநிதி, "பார்லிமென்டின் பெரிய கட்டடத்தை பார்த்தவுடன் சம்பத் மயங்கி விட்டார்' என்று அறிக்கை விட்டார்.
சம்பத் அதற்கு பதில் சொன்னார், "எங்கள் மாவட்டத்திலேயே பெரிய அரண்மனையிலே பிறந்தவன் நான். கருணாநிதிக்கு தான் பெரிய கட்டடங்கள் வியப்பை தரும்' என்று. இளங்கோவன், தன் தாயாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். ஆனால், அதுவும் முடியாத சூழல். கருணாநிதியோ இளங்கோவனை, தன் மடியில் தவழ்ந்த குழந்தை என்று போற்றி விட்டார்.
இவை எல்லாவற்றையும் விட மிகப்பெரிய நகைச்சுவை, உள்துறை அமைச்சர் பொருளாதார மேதை சிதம்பரம், "தேர்தல் கமிஷன் திருமண வீட்டை வேறு வீடாக்கப் பார்க்கிறது' என்கிறார். மேற்கு வங்கத்தில் மம்தா சொல்லவில்லை.
கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணி தோழர்கள் சொல்லவில்லை. சகவாச தோஷம், பெரிய மேதையான அவரும் புலம்புகிறார். ராமதாசும் குற்றம் சாட்டுகிறார். பென்னாகரம் தேர்தலிலே, ஆளுங்கட்சியை குற்றம் சாட்டியவர். சிரிப்பாக தான் வருகிறது. திருமங்கலமும், திருச்செந்தூரும், பென்னாகரமும் தானே இத்தனைக்கும் காரணம்.
அ.தி.மு.க., கூட்டணியில் மீண்டும் வைகோ: போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதாவுடன் சந்திப்பு
00:40 Edit This 0 Comments »அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவை நேற்று இரவு ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ திடீரென சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதன் மூலம், அ.தி.மு.க., - ம.தி.மு.க.,வுடனான ஊடல் நேற்று முடிவுக்கு வந்தது.
சென்னையில் இன்று பத்திரிகையாளர்களை சந்திக்கும் வைகோ, அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்ற வேண்டுமென, ம.தி.மு.க., தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுக்கவுள்ளார் என, அ.தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றிருந்த ம.தி.மு.க.,வுக்கு 21 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என வைகோ விடுத்த கோரிக்கையை ஜெயலலிதா ஏற்கவில்லை. 9 தொகுதிகள் வரை மட்டுமே வழங்க முடியும் என அ.தி.மு.க., தெரிவித்ததால், தேர்தலைப் புறக்கணிக்க ம.தி.மு.க., முடிவு செய்தது. இந்த அறிவிப்பை வெளியிட்டுவிட்டு சொந்த ஊருக்கு சென்ற வைகோ, அங்கு இரு நாட்கள் தங்கியிருந்தார். பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், "யாருக்கு நாங்கள் ஓட்டளிப்பது' என தொண்டர்கள் கேட்டதையடுத்து அவர்களுக்கு உரிய வழிகாட்டுதலுக்காக மாவட்டவாரியாக, சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் வைகோ திட்டமிட்டிருந்தார். ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு அவர் சென்று திரும்பியுள்ளார்.
இதற்கிடையில், "தேர்தல் புறக்கணிப்பு மூலமாக, மீண்டும் தி.மு.க., வெற்றி பெறுவதற்கு நாமே காரணமாக மாறிவிடும் அபாயம் இருக்கிறது. இதைத் தடுக்கும் வகையில், பொதுச் செயலர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வலியுறுத்தி, கோவை, மதுரை, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களின் செயலர்கள், வைகோவிற்கு கடிதம் எழுதியுள்ளனர். அ.தி.மு.க., வட்டாரத்திலிருந்தும் வைகோவிற்கு சமிஞ்சைகள் அனுப்பப்பட்டுள்ளன. "புதிய பார்வை' இதழின் ஆசிரியர் நடராஜன் சமீபத்திய பேட்டியின்போது, "வைகோவை அ.தி.மு.க., இழந்திருக்கக் கூடாது' என்று வெளிப்படையாக தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, அ.தி.மு.க.,வின் இரண்டாம்கட்டத் தலைவர்கள், வைகோவுடன் பேசுவதற்கு தொடர் முயற்சி எடுத்து வந்தனர். ஆனால், "உங்களால் எந்த முடிவும் எடுக்க முடியாது என்கிறபோது, உங்களிடம் பேசுவதில் பலனில்லை. எங்கள் கட்சியின் மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை நானாக மாற்றுவதற்கில்லை' என்று, வைகோ தெரிவித்துள்ளார். வேலூரில் பிரசாரத்தில் இருந்த ஜெயலலிதாவிற்கு இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பார்வதி அம்மாள் அஸ்தி கரைப்பு நிகழ்ச்சிக்காக கன்னியாகுமரி சென்றிருந்த வைகோவிடம், நேற்று மதியம் 2 மணிக்கு ஜெயலலிதா, டெலிபோனில் பேசியுள்ளார். 10 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நீடித்த நிலையில், நேரில் வந்து சந்திப்பதாக வைகோ கூறியுள்ளார்.
கன்னியாகுமரியில் மாலை 4 மணிக்கு நடந்த அஸ்தி கரைப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற வைகோ, அங்கிருந்து கார் மூலம் மதுரை விரைந்தார். மதுரையில் இருந்து இரவு 8.55 மணிக்கு சென்னை புறப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் இரவு 10.15 மணிக்கு சென்னை வந்தடைந்தார். அங்கிருந்து கிளம்பி, இரவு 11 மணிக்கு போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டிற்கு வந்தார். ஜோலார்பேட்டை, வேலூரை அடுத்து, காஞ்சிபுரத்தில் நேற்று இரவு பிரசாரத்தில் ஈடுபட்ட ஜெயலலிதா, பிரசாரத்தை முடித்துவிட்டு போயஸ் தோட்டம் திரும்பியிருந்தார். இருவரும் 15 நிமிடங்கள் நேருக்கு நேர் பேசினர். தகவல் தெரிந்த பத்திரிகையாளர்கள், வெளியில் வந்த வைகோவிடம் பேட்டி எடுக்க முயன்றனர். ஆனால், வைகோ காரை நிறுத்தாமல் சென்றுவிட்டார். அ.தி.மு.க., கூட்டணி வெற்றிக்கு பாடுபடுமாறு, இன்று தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு விடுப்பார் என, தாயக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
"நம்புவதே வழி என்ற மறைதனை நாம் இன்று நம்பி விட்டோம்' என்ற பாரதியாரின் கவிதை வரியை வாசகர்களுக்கு நினைவுபடுத்துகிறோம். அரசியலில் எதுவும் சாத்தியம்; எவருக்கும் வழியும் கிடையாது, மறையும் கிடையாது என்று நம்ப வைத்துள்ளது தற்போதைய அரசியல் போக்கு. எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும், எப்படியும் மே 13ம் தேதிக்குப் பின், மக்களை முட்டாளாக்கத்தான் போகின்றனர். அதைத் தாங்கும் அளவுக்கு மக்களுக்கு ஒரு மனோதைரியத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தின் விளைவே இச்செய்தி. ஒருவேளை உண்மையிலேயே இப்படி ஒரு சந்திப்பு நடந்துவிட்டால், "தினமலர்' பொறுப்பல்ல."அரசியல்வாதிகளைப் போல் நீங்களும் எங்களை முட்டாளாக்கலாமா' என்று கோபப்படும் வாசகர்களுக்கு, ஏப்ரல் முதல் நாள் வாழ்த்துக்கள்...!

| |
விஜய் ஆதரவு மட்டும்தான்; அதிமுகவுக்கு பிரச்சாரம் இல்லை!-எஸ்ஏ சந்திரசேகரன்
15:42 Edit This 0 Comments »சென்னை: இந்தத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவளிப்பார் விஜய். ஆனால் களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்யவாரா என்று தெரியவில்லை என்று இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகரன் தெரிவித்தார்.
நடிகர் விஜயின் தந்தையும், விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளருமான ஏ.எஸ்.சந்திரசேகரன் சென்னையில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார்.
அப்போது தனது அதிமுக ஆதரவு குறித்து அவர் கூறுகையில், "மக்கள் இயக்கம் ஒரு அரசியல் இயக்கம் அல்ல. நானும், என் மகன் விஜயும் அரசியல்வாதிகள் அல்ல. இதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் சினிமா கலைஞர்களாகவே இருக்க விரும்புகிறோம்.
ஜனநாயக நாட்டில் எல்லா தரப்பு மக்களும் சுதந்திரமாக வாழ வேண்டும். அதற்கு தமிழகத்தில் ஒரு அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும். இது தான் எங்கள் இயக்கத்தின் லட்சியம். இதற்காக அ.தி.மு.க.விற்கு ஆதரவு அளித்து இருக்கிறோம்.
அ.தி.மு.க.விற்கு ஆதரவளிப்பது என்ற முடிவை நானோ, விஜயோ தன்னிச்சையாக எடுத்த முடிவு இல்லை. நிர்வாகிகளை அழைத்து அவர்களின் கருத்துப்படி கேட்டுத்தான் இந்த முடிவை எடுத்தோம்.
நடிகர் விஜய் அ.தி.மு.க.வை ஆதரித்து பிரசாரம் செய்வாரா என்று கேட்கிறார்கள். விஜய் தலைமையிலான மக்கள் இயக்கம் அ.தி.மு.க.வை ஆதரிக்கிறது. தேர்தலுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளன. அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து நான் பிரசாரம் செய்ய இருக்கிறேன். விஜய் எப்போது, எப்படி பிரசாரம் செய்வார் என்பது பற்றி எனக்கு தெரியாது. அதை அவர்தான் சொல்ல வேண்டும். இப்போது ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார் அவர். பிரச்சாரம் சாத்தியமா என்று தெரியவில்லை.
சேலம் மாவட்டத்தில் ரசிகர்கள் சிலர் விஜய்யின் அதிமுக ஆதரவு நிலையை எதிர்த்து மன்ற உறுப்பினர் கார்டுகளை எரித்ததாகக் கூறப்படுவது தவறு. வேண்டுமென்றே உறுப்பினர் இல்லாதவர்களை அழைத்து இது போன்று செய்திருக்கிறார்கள்", என்றார்.

ஜெயலலிதா முதல்வராக வேண்டும்-கருணாநிதியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் – மயில்சாமி
19:23 Edit This 0 Comments »சினிமா துறை உள்பட அனைத்து துறைகளிலும் கருணாநிதியின் குடும்பத்தினர் தலையீடு இருக்கிறது. இவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டும் என் தென்காசி தொகுதியி்ல் நடிகர் சரத்குமாரை ஆதரித்து இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்த காமெடி நடிகர் மயில்சாமி பிரசாரம் செய்தார்.
தென்காசியில் நடந்த பிரசாரத்தின்போது மயில்சாமி கூறுகையில்,
கருணாநிதி குடும்ப ஆட்சியை வீ்ட்டிற்கு அனுப்ப வேண்டும், சினிமா துறை மட்டுமல்லாமல் அனைத்து துறையிலும் கருணாநிதியின் குடும்ப தலையீடு இருக்கிறது. உழைத்து 500 ரூபாய் பெற்றாலும் அதற்கு கப்பம் கட்ட வேண்டியுள்ளது.
ஏமாந்தவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களுக்கு கொண்டாட்டம்தான். அப்படி ஏமாற்றுபவர்களை விரட்டியடிக்க வேண்டும். தமிழகத்தில் நல்லாட்சி மலரவும், மக்கள் வளமாக வாழவும், சட்டம், ஓழுங்கு சீராக இருக்கவும் ஜெயலலிதா முதல்வராக வரவேண்டும். அதற்கு தென்காசி தொகுதியில் சரத்குமாரை ஆதரிக்க வேண்டும்.
அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் ஓட்டு போட்டு அவரை அமோகமாக வெற்றி பெறச்செய்யும்படி கேட்டு கொள்கிறேன் என்றார் மயில்சாமி.
கூட்டணியை மாற்றிக் கொண்டே இருக்கும் பாமகவுக்கு குரங்கு குணம்: விஜயகாந்த்
13:58 Edit This 0 Comments »கும்மிடிப்பூண்டி: குரங்கு மரம் விட்டு மரம் தாவுவது போல ஒவ்வொரு தேர்தலிலும் பாமக கூட்டணியை மாற்றிக் கொண்டே இருக்கிறது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
கும்மிடிப்பூண்டி சட்டசபை தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் செய்தார். ஊத்துக்கோட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் விஜயகாந்த் பேசியதாவது,
பாமகவினர் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை நாட்டில் உள்ள மரங்களை எல்லாம் வெட்டி நாசமாக்கிவிட்டனர். இப்போது பசுமை தாயகம் என்ற பெயரில் அமைப்பு தொடங்கி மரம் நடச் சொல்கின்றனர்.
இதேபோன்று மதுவை ஒழிப்போம், டாஸ்மாக் கடைகளை விரட்டுவோம் என அன்று வீராப்புடன் முழங்கியவர்கள் இன்று டாஸ்மாக் கடைகளை நடத்தும் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளனர்.
குரங்கு மரம் விட்டு மரம் தாவுவது போல ஒவ்வொரு தேர்தலிலும் பாமக கூட்டணியை மாற்றிக் கொண்டே இருக்கிறது.
திமுக ஆட்சியில் விலை வாசி உயர்வு, மின்வெட்டு போன்ற பிரச்சனைகளால் பொதுமக்கள் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகியுள்ளனர். எனவே, இந்த தேர்தலில் திமுகவையும், அதன் கூட்டணிக் கட்சியான பாமகவையும் பொது மக்கள் விரட்டியடிப்பார்கள் என்றார்.

கூட்டணியை பிரிக்க சதி: விஜயகாந்த் குற்றச்சாட்டு
20:50 Edit This 0 Comments »சென்னை: ""கூட்டணியை பிரிக்க சிலர் சதி செய்து வருகின்றனர். அதற்கு இடம் கொடுக்காமல், கூட்டணி கட்சி தொண்டர்கள் ஒன்று சேர்ந்து, வெற்றிக்கு பாடுபட வேண்டும்,'' என, திருத்தணியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறினார். திருத்தணி தொகுதியில் அ.தி.மு.க., கூட்டணி சார்பில் தே.மு.தி.க., வேட்பாளர் அருண் சுப்பிரமணியத்தை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், நான் அ.தி.மு.க., கூட்டணியில் சேரக்கூடாது என, பலர் எதிர்க்கட்சிகளிடம் 100 கோடி, 200 கோடி, 500 கோடி ரூபாய் பணம் வாங்கிவிட்டதாக வதந்தி பரப்பினர். மக்களிடம் கூட்டணி வைத்துள்ளேன். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. தமிழக மக்களுக்காக தான் அ.தி.மு.க.,வுடன் கூட்டு சேர்ந்தேன். இது எம்.ஜி.ஆர்., ஆரம்பித்த கட்சி என்பதால் தான் கூட்டணி வைக்க சம்மதித்தேன். கூட்டணி வைத்துள்ளதால் ஆட்சியில் பங்கோ, துணை முதல்வர் பதவியோ கேட்க மாட்டேன். ஏழைகளுக்கு தி.மு.க., ஆட்சியில் எந்தவித நன்மையும் செய்யவில்லை. விவசாயிகள் மின்தடையால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இந்த தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டு போட வேண்டும். தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று பேசினார்.
ஓட்டுக்கு ரூ.5,000: பண வினியோகத்தில் தி.மு.க., முதலிடம்
00:21 Edit This 0 Comments »தி.மு.க., கூட்டணி, ஓட்டுக்கு, 5,000 ரூபாய் கொடுக்கும் பணியை துவங்கி விட்டது. பணப் பட்டுவாடாவை முடிக்க, இலக்கும் நிர்ணயித்து, வேலைகள் ஜரூராக நடந்து வருகின்றன. எதிரணியினர், வாக்காளர்களை அணுகுவதற்கு முன்பே, ஓட்டுகளை உறுதி செய்துவிட வேண்டும் என்று திட்டமிட்டு பணியாற்றி வருகின்றனர். வேட்பாளர் கவனிப்புக்காக, தி.மு.க., கூட்டணியில், தொகுதி வாரியாகத் தனிக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள், தொகுதியில் உள்ள வார்டு வாரியாக வேட்பாளர்களை, அவர்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கு ஏற்ப பிரித்துள்ளனர். இந்த குடியிருப்புகளில் உள்ள நலச்சங்க நிர்வாகிகளிடம், அக்குடியிருப்புகளில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பணத்தைக் கொடுத்து வருகின்றனர். ஜாதி வாக்காளர்கள் அதிகம் உள்ள பகுதிகளில், ஜாதி சங்கங்களின் கிளை நிர்வாகிகளிடம், வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பணப் பட்டுவாடா நடக்கிறது. தொழிற்கூடங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதிகளில், தொழிற்சங்கங்கள், வணிகர் சங்கங்களின் பிரதிநிதிகளிடம் பணப் பட்டுவாடா குழுக்கள், பணப் பரிவர்த்தனையை நடத்துகின்றன.
தேர்தல் கமிஷனின் கெடுபிடியால், போர்வேல் அமைத்துக் கொடுத்தல், குடிநீர் பைப் லைன் மற்றும் குடிநீர் தொட்டிகள் கட்டிக் கொடுத்தல் போன்றவை பெரும்பாலும் கைவிடப்பட்டு, நேரடியாக பணமே வழங்கப்படுகிறது. வாக்காளர்களிடம் உறுதி செய்கின்றனர்: அந்தந்தப் பகுதிக்கு ஏற்ப குடியிருப்பு நலச் சங்கம், ஜாதி சங்கங்கள், தொழிற் சங்கங்கள் மற்றும் வணிகர் சங்கங்கள் போன்ற அமைப்புகளிடம் வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, மொத்தமாக தொகையைக் கொடுத்தாலும், வாக்காளர்களுக்கு அத்தொகை சென்றடைந்ததா என்று பணப் பட்டுவாடா குழுக்கள் உறுதி செய்கின்றன. இதற்காக, பெண்களை உறுப்பினர்களாகக் கொண்டு பட்டுவாடாக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுக்கள், எந்தப் பகுதியில் பணப் பட்டுவாடாவை உறுதி செய்ய வேண்டுமோ, அப்பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில், வீடுவீடாகச் சென்று ஓட்டு சேகரிப்பது போல, வாக்காளர்களிடம் பணம் வந்து சேர்ந்ததா என, உறுதி செய்கின்றனர். உறுதி செய்யும் பணியில், ஆண்களை விட, பெண்களே பொருத்தமானவர்கள் என்றும் சந்தேகம் ஏற்படாது என்றும், அவர்களை நியமித்துள்ளதாகக் கூறுகின்றனர்.
"குடிமகன்'களுக்கு தனி கவனிப்பு: குடிமகன்களை கவனிப்பதற்கு, பண பட்டுவாடாக் குழுவிலேயே, தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, அந்தந்தப் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில், மொத்தமாக அல்லது தினமும் ஒரு தொகையை அளித்து விடுகின்றனர். குழுவின் பிரதிநிதிகள் கூறும் நபர்களுக்கு உற்சாக பானத்தை டாஸ்மாக் கடைகள் வழங்குகின்றன. நொறுக்குத் தீனிகளை, டாஸ்மாக் கடைகளில் உள்ள பார்கள் கொடுக்கின்றன. டாஸ்மாக் கடைகளில், பணத்தை மொத்தமாகக் கொடுப்பதாலோ அல்லது தினந்தோறும் செட்டில் செய்வதாலோ, அதிகாரிகள் திடீரென ஆய்வு செய்யும் போது, டாஸ்மாக் கடைகளில், பண இருப்பில் சிக்கல் ஏற்படுகிறது. அதனால், பட்டுவாடா குழுவின் பிரதிநிதி, டாஸ்மாக் கடையை அவ்வப்போது, தொடர்பு கொண்டு பணத்தை செட்டில் செய்கிறார்.
9ம் தேதி இலக்கு: ஓட்டுப் பதிவுக்கு நான்கு நாட்களுக்கு முன்பே, பணப் பட்டுவாடாவை முடித்துக் கொள்ள வேண்டும் என, இலக்கு நிர்ணயித்து குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. பிற கட்சிகள், வாக்காளர்களை நெருங்கும் முன், அவர்களை தங்களுக்கு ஆதரவாக்கிக் கொள்ள வேண்டும் என்று இந்தத் தேதி நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகக் கூறுகின்றனர். மேலும், கொடுத்த பணம் போதாது என்று பிரச்னை எழும்போது அதை சமரசம் செய்யவும், கூடுதலாக பணம் கொடுக்கவும், போதிய அவகாசம் வேண்டும் என்பதற்காகவும், ஏப்ரல் 9ம் தேதி இலக்காகக் குறிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கின்றனர். ஓட்டுப் பதிவுக்கு முந்தைய சில தினங்கள், தேர்தல் கமிஷனின் கெடுபிடி தீவிரமாக இருக்கும் என்பதும், ஏப்ரல் 9ம் தேதியை இலக்காக கொண்டதற்கு காரணமாகக் கூறுகின்றனர்.
source: http://election.dinamalar.com/election_news_detail.php?id=1473
நடிகர் விஜய் மக்கள் இயக்கம் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக பிரச்சாரம்
23:55 Edit This 0 Comments »திருச்சி: தமிழக சட்டசபைத் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக திருச்சி சங்கம் ஹோட்டலில் தங்கியுள்ள அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை, நடிகர் விஜயின் தந்தையும், திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் சந்தித்து பேசினார்.
20 நிமிடம் நடந்த சந்திப்புக்கு பின் இயக்குனர் சந்திரசேகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: வரும் சட்டசபைத் தேர்தலில் நடிகர் விஜய் மக்கள் இயக்க நிலைப்பாடு என்ன? என்று மக்கள் மத்தியிலும், இயக்கத்தினர் மத்தியிலும் கேள்வி நிலவி வருகிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே ஒரு முடிவு எடுத்துள்ளோம். தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மக்கள் இயக்கத்தில் உள்ளனர். ஆனாலும், வரும் சட்டசபைத் தேர்தலில் மக்கள் இயக்கம் அ.தி.மு.க.,வை ஆதரிக்கிறது. அந்த கட்சி ஆட்சிக்கு வர முனைப்பாக இறங்கி மக்கள் இயக்கத்தினர் வேலை செய்வார்கள். இயக்கத்தில், 20 முதல், 30 வயது உடைய இளம் ரத்தங்களே உள்ளனர். நாட்டில் அவ்வப்போது அரசியல் மாற்றம் வரவேண்டும் என்ற காரணத்துக்காகத்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அடிக்கடி அரசியல் மாற்றங்கள் ஏற்படுவது தான் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லது. அதுவும் சமீபகால அரசியலுக்கு மாற்றம் அவசியம் தேவை. அ.தி.மு.க., ஆட்சிக்கு வரவேண்டும். ஜெ., முதல்வராக வேண்டும். அதற்கு மக்கள் இயக்கத்தின் உழைப்பு முனைப்புடன் இருக்கும்.
நடிகர் விஜய் நேரடியாக பிரச்சாரம் செய்வது பற்றி இப்போது கூறமுடியாது. ஆனால், அவரின் ஆதரவு அ.தி.மு.க.,வுக்கு உண்டு. மக்கள் இயக்கத்தில், 50 பேரை உறுப்பினராக கொண்ட, 47 ஆயிரம் பதிவு பெற்ற மன்றங்கள் உள்ளன. சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க., ஆதரிப்பது அரசியலுக்கு வருவதற்காக இல்லை. அரசியலுக்கு வர நாங்கள் அவசரப்படவும் இல்லை. தனிப்பட்ட முறையில் ஏற்படும் பாதிப்புகளை நானும், நடிகர் விஜய்யும் சந்தித்துக் கொள்வோம். அதற்காக இயக்கம் ஆதரவு கொடுக்கவில்லை. இதில், சுயநலமும் இல்லை. சமீபகாலமாக நாட்டில் நடக்கும் வன்முறை, விலைவாசி உயர்வு, ஊழல் ஆகியவை காரணமாக பொதுநல நோக்கில் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். நாட்டின் மிகப்பெரிய ஊழலாக பேசப்பட்ட போபர்ஸ் ஊழலை விட, ஸ்பெக்டரமில் பல லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது. நாடு வளர்ச்சி அடைந்துள்ளதோ இல்லையோ, ஊழல் வளர்ச்சி அடைந்துள்ளது. நாட்டின் நிலையைப் பார்த்து ஒரு தமிழனாக, ஒரு இந்தியனாக இந்த முடிவுக்கு வந்துள்ளோம்.
மக்கள் இயக்கத்தின் சார்பில் நான் பிரச்சாரம் செய்ய வாய்ப்புள்ளது. நான் அரசியல்வாதியும் அல்ல. மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமும் அல்ல. மக்களுக்காக குரல் கொடுக்கும் சமூக இயக்கம். ஈழத்தமிழருக்காக உண்ணாவிரதம் இருந்துள்ளோம். தமிழக மீனவர்கள் சுட்டுக் கொள்ளப்பட்டதை கண்டித்து நாகையில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தினோம். நான் முதல்வராக கருணாநிதியிடமும், ஜெயலலிதாவிடமும் பலமுறை நலநிதி வழங்கியுள்ளேன். இதுவரை எந்த கட்சியிலும் நான் உறுப்பினர் இல்லை. நான் ஒரு தமிழன். எனக்கு திரைப்படம் மூலம் கலைஞரைத் தெரியும். தி.மு.க.,வைத் தெரியாது. நாட்டில் உள்ள பிரச்னைகளை மையப்படுத்தி பிரச்சாரம் மேற்கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
source: http://election.dinamalar.com/election_news_detail.php?id=1462
மணற் கொள்ளையில் ஈடுபெடும் பெரும் புள்ளிகளை சிறையில் தள்ளுவேன்-ஜெயலலிதா
18:16 Edit This 0 Comments »கரூரில் இன்று பிற்பகல் ஜெயலலிதா பிரசாரம் மேற்கொண்டு பேசினார். அவரது பேச்சிலிருந்து சில பகுதிகள்:
*இது மாற்றத்திற்கான தேர்தல் மட்டுமல்ல. மக்களுக்கு விடுதலை பெற்றுத் தரும் தேர்தல். அடிமைத்தளையிலிருந்து மக்களை விடுவிக்க நடத்தப்படும் தேர்தல் .
*திமுக ஆட்சியின் கீழ் கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்கள் பல பிரச்சினைகளில் சிக்கித் தவித்து வருகின்றனர். அதில் மக்களை வெகுவாக பாதித்தது விலைவாசி பிரச்சினை. விலைவாசியைக் குறைக்க கருணாநிதி ஏதாவது நடவடிக்கை எடுத்தாரா என்றால் இல்லை. மாறாக விலைவாசி உயரத்தான் அவர் வழி வகுத்தார்.
*அriசி கடத்தலை ஊக்குவித்தார், பதுக்கல்காரர்களுக்குப் பக்க பலமாக இருந்தார். டீசல் விலை உயரக் காரணமாக இருந்தார். மண்ணெண்ணெய் விலை உயர்வுக்கு ஆதரவளித்தார். பெட்ரோல் விலைக்கு ஆதரவாக இருந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளில் 9 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு, 15 ரூபாய் அதிகரித்துள்ளது.
*கிலோ 15 ரூபாய்க்கு விற்ற அரிசி இன்று 42 ரூபாய். 13 ரூபாய் சர்க்கரை 35 ரூபாய், 25 ரூபாய் துவரம் பருப்பு 90 ரூபாய், 35 ரூபாய் புளி 110 ரூபாய்க்கு விற்கிறது.
*மணற் கொள்ளை மூலம் ரூ. 50,000 கோடி, கிரானைட் கற்கள் கொள்ளை மூலம் ரூ. 80,000 கோடி என கருணாநிதி குடும்பத்தினர் கொள்ளையடித்துள்ளனர். 2005க்கு விற்ற ஒரு லோடு மணல் இன்று ரூ. 13,000 ஆக விற்கிறது. 150க்கு விற்ற ஒரு மூடை சிமென்ட் இன்று ரூ. 280க்கு விற்கிறது. 3 ரூபாய்க்கு விற்ற செங்கலின் விலை 6 ரூபாய். இனி கனவில்தான் வீடு கட்ட முடியும்.
*அடுத்த முக்கியப் பிரச்சினை மின்வெட்டு. கருணாநிதி ஆட்சிக்கு வந்த பின்னர் மின் உற்பத்தி பெருகவில்லை, மாறாக மின்வெட்டுதான் பெருகி விட்டது. மின் மிகை மாநிலமாக இருந்த தமிழகம் கருணாநிதி ஆட்சிக்கு வந்த பின்னர் மின்வெட்டு மாநிலமாக மாறியுள்ளது. தொழில் உற்பத்தி குறைந்து, விவசாய விளைச்சல் வீழ்ச்சியடைந்து, ஜவுளித் தொழில் நசிந்து பொருளாதாரம் நலிவடைந்து விட்டது. சட்டம் ஒழுங்கு இல்லாமலேயே போய் விட்டது.
*தமிழகத்தில் நடைபெறுவது ஆட்சியே இல்லை. ஒரு ரவுடிக் கும்பல் தமிழக மக்களை அடக்கி ஆள்கிறது. காவல்துறை கருணநிதியின் ஏவல் துறையாகி விட்டது. உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல். நிலவுகிறது. எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்பதே கருணாநிதியின் தராக மந்திரம்.
*1 லட்சம் கோடிக்கு மேல் தமிழக அரசின் கடன் உள்ளது. ஆனால் ஸ்பெக்ட்ரம் ஊழலில் மட்டும் 1.80 லட்சம் கோடி ரூபாயை சம்பாதித்துள்ளனர் கருணாநிதி குடும்பத்தினர்.
*கருணாநிதி குடும்ப டிவிகள் அனைததும் இந்த ஊழல் பணத்திலிருந்துதான் ஆரம்பிக்கப்பட்டன. இந்தப் பணம் அரசுக்கு்க கிடைத்திருந்தால் நாடு வளம் பெற்றிருக்கும். ஆனால் தற்போது வளம் பெற்றிருப்பது கருணாநிதி குடும்பம் மட்டும்தான். மக்கள் பணத்தை சுருட்டி தன் மக்களை கோடீஸ்வரர்களாக்கிய ஒரே முதல்வர் கருணாநிதி மட்டுமே.
*லஞ்ச ஊழல் ஆட்சியால் நாட்டின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. காலாவதி மருந்து, கள்ள லாட்டரிச் சீட்டு விற்பனை என்று பல வழிகளிலும் கருணாநிதி குடும்பத்திற்கு பணம் சென்று கொண்டேதான் உள்ளது.
*அரசுத் திட்டங்களில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கருணாநிதிக்கு அடியோடு இல்லை. மத்திய அரசில் அங்கும் வகித்தும் மக்கள் பிரச்சினகைளைத் தீர்க்க கருணாநிதிக்கு முடியவில்லை. காவிரி இறுதி தீர்ப்பை கெஜட்டில் வெளியக் கூடச் செய்ய முடியவில்லை அவரால்.
*முல்லைப் பெரியாறு வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்த முடியவில்லை. பாலாற்றில் அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த கருணாநிதியால் முடியவில்லை.
*அரசு ஊழியர்களின் சம்பளத்தைக் குறைத்த ஒரே அரசு கருணாநிதி அரசுதான். ரியல் எஸ்டேட் வேலையைத்தான் கருணாநிதி குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.
*கரூரில் நடைபெறும் மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். பெரிய புள்ளிகள் கம்பி எண்ணுவார்கள். நூல் விலை உயர்வைக் குறைத்து ஜவுளி ஏற்றுமதியை ஊக்குவிக்கவும், சாயக் கழிவு பிரச்சினைக்கு நீரந்தரத் தீர்வு காணவும், புதிய காவிரி குடிநீர்த் திட்டம் அமையவும், பழைய அமராவதி பாலத்தையொட்டி புதிய பாலம் அமைக்கவும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க புறவழி இணைப்புச் சாலை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
*ஒரு ஓட்டுக்கு ரூ. 1 லட்சம் வரை கூட கொடுக்கக் கூடிய அளவில்திமுகவினர் உள்ளனர். அவர்கள் பணத்தோடு வருவார்கள். அதைப் பெற்றுக் கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். அது உங்கள் பணம்தான். அதை வாங்கிக் கொண்டு, மனசாட்சி சொல்வது போல செய்யுங்கள் என்றார் ஜெயலலிதா.
"கருணாநிதியால் ஓட்டுக்கு ரூ.1 லட்சம் தரமுடியும்': ஜெ., "திடுக்'
18:00 Edit This 0 Comments »திருச்சி: திருச்சியில் மூன்று நாள் சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள ஜெயலலிதா மூன்றாம் நாளான நேற்று இலவச அஸ்திரத்தை கையிலெடுத்தார். ""ஓட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் கருணாநிதியால் தரமுடியும்; அதை வாங்கிக் கொண்டு மனசாட்சிப்படி ஓட்டளியுங்கள்,'' என்று ஜெயலலிதா பேசினார்.
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா, ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட திருச்சி பழைய கலெக்டர் அலுவலகத்துக்கு மாற்றப்பட்ட ஸ்ரீரங்கம் நில சீர்திருத்தம் உதவி கமிஷனர் அலுவலகத்தில் கடந்த 24ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்தார். ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் பகுதியில் தன் முதல் நாள் பிரச்சாரத்தை துவக்கிய ஜெயலலிதா, இரண்டு நாட்களாக 70 கி.மீ., தூரம் பயணம் செய்தார். மூன்றாம் நாளான நேற்று திருச்சி புத்தூர் நால்ரோட்டில் பிரச்சாரத்தைத் துவக்கினார். தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள, 24 இலவசங்கள் பற்றி கடந்த இரண்டு நாள் பிரச்சாரத்தில் குறிப்பிடவில்லை. மூன்றாம் நாள் பிரச்சாரமான நேற்று ஜெயலலிதா, இலவச அஸ்திரத்தை கையிலெடுத்து பேசினார். இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. நேற்று முன்தினத்தை விட நேற்று ஏராளமான தொண்டர்கள், மக்கள் ஜெயலலிதாவை காண கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது நீண்ட நேரம் காத்திருந்தனர். மாலை 5 மணிக்கு சங்கம் ஹோட்டலிலிருந்து புறப்பட்ட ஜெயலலிதா புத்தூர் நால்ரோட்டில் தன் பிரச்சாரத்தை துவக்கினார்.
திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளர் மரியம்பிச்சைக்கு ஓட்டு கேட்டு, ஜெயலலிதா பேசியதாவது: கடந்த ஐந்தாண்டு ஆட்சியில் மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை மூலம் கருணாநிதி குடும்பம் கோடிகளை குவித்துள்ளது. கருணாநிதி, மக்கள் பணத்தைச் சுரண்டி தன் மக்களை கோடீஸ்வரர்களாக்கியுள்ளார். திரைப்படத்துறையில் கருணாநிதியின் குடும்ப ஆதிக்கம் அதிகரித்துள்ளது. தமிழகத்தை ரவுடிக்கும்பல் தான் ஆட்சி செய்கிறது. இந்நிலை தொடர வேண்டுமா? திருச்சி மேற்குத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க., அமைச்சர் நேருவுக்கு தெரியாமல் மாவட்டத்தில் எந்த நிலமும் விற்கப்படுவதில்லை. "தில்லைநகர் நேருநகர்' ஆகிவிட்டது. நேரு மீண்டும் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமா? மின்மிகு மாநிலமாக இருந்த தமிழகம் "மின்வெட்டு' மாநிலமாக மாறிவிட்டது. சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுக் கிடக்கிறது. காவல் துறை, கருணாநிதியின் ஏவல் துறையாக மாறிவிட்டது. இந்நிலை மாற வேண்டும். ஓட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் தரக்கூடிய அளவுக்கு கருணாநிதியிடம் பணம் உள்ளது. தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுப்பர். அதை வாங்கிக் கொள்ளுங்கள்; மனசாட்சிப்படி ஓட்டளியுங்கள். இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.
திருச்சி கிழக்குத் தொகுதி வேட்பாளர் மனோகரனுக்கு ஓட்டுகேட்டு சத்திரம் பஸ் ஸ்டாண்டில், இலவச அஸ்திரத்தை கையிலெடுத்து ஜெயலலிதா பேசியதாவது: ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்ற நிலை மாற்றப்பட்டு, அனைத்து ரேஷன் கார்டுதாரருக்கும், 20 கிலோ அரசி இலவசமாக வழங்கப்படும். மணப்பெண் தாலிக்கு, 4 கிராம் தங்கம் இலவசமாக வழங்கப்படும். தாய்மார்களுக்கு இலவசமாக மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் வழங்கப்படும். முதியோர், ஊனமுற்றோர், ஆதரவற்றோர் உதவித் தொகை, 500 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக உயர்த்தப்படும். அரசு சார்பில் விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசனம் செய்து தரப்படும். கரும்பு கொள்முதல் விலை, 2,500 ரூபாயாக உயர்த்தப்படும். அரசு, தனியார் பள்ளியில் ப்ளஸ் 1, ப்ளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியருக்கு இலவச லேப்-டாப் கம்ப்யூட்டர் வழங்கப்படும். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 10 லட்சம் ரூபாய் கடனுதவியும், அதில் 25 சதவீதம் மானியம் வழங்கப்படும். 58 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படும். மூன்று லட்சம் ஏழைகளுக்கு 1.80 லட்சம் ரூபாய் மதிப்பில் 300 சதுரஅடியில் பசுமை வீடுகள் கட்டித்தரப்படும். வீடில்லாதவர்களுக்கு 3 சென்ட் நிலம் தரப்படும். வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு, 4 ஆடுகள் இலவசமாக வழங்கப்படும். பால் உற்பத்தியை பெருக்கும் வகையில், 6,000 கிராமங்களில் 60 ஆயிரம் கவைமாடுகள் வழங்கப்படும். இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.
"ஸ்பெக்டரம்' ஆம்னிவேன்': முதல்வர் கருணாநிதி குடும்பத்தை மட்டுமல்ல உலகம் முழுவதும் உலுக்கியெடுத்த "ஸ்பெக்டரம்' குறித்து அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா தொடர்ந்து ஒவ்வொரு மேடைகளிலும் கடுமையாக விமர்சித்து வருகிறார். நேற்று அவர் பிரச்சாரம் செய்த திருச்சி, சத்திரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் "ஸ்பெக்டரம்' ஊழலை விளக்கும் வகையில் ஆம்னிவேன் நிறுத்தப்பட்டிருந்தது. அதில், தொலைத்தொடர்பு சாதனங்கள் அலங்கரிக்கப்பட்டு, "ஸ்பெக்டரம்' ஊழல் தொகையான ரூ.1,76,000 லட்சம் கோடி என எழுதப்பட்டிருந்தது. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வேனுக்கு முன் நின்று அனைவரும் "ஃபோட்டோ' எடுத்துக் கொண்டனர்.