அமைச்சர் மரியம் பிச்சை உடல் அரசு மரியா‌தையுடன் அடக்கம்

18:48 Edit This 0 Comments »
திருச்சி : திருச்சி அடுத்த பாடாலூரில் நேற்று நடந்த சாலை விபத்தில் சுற்றுச்சூழல் அமைச்சர் மரியம் பிச்சை பலியானார். அவரது உடல் அரசு மரியா‌தையுடன் அடக்கம் செய்யப்பட்டது. 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக அவரது உடல் திருச்சி சங்கிலியாண்டபுரம் மரியம் தியேட்டரில் பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது. பொது மக்கள் அஞ்சலி முடிந்த நிலையில் அங்கிருந்து முதலியார்சத்திரம், மேலப்புதூர், வழியாக பாலக்கரை என்.எம்.பள்ளிவாசலுக்கு மரியம்பிச்சையின் உடல் கொண்டு வரப்பட்டது. அங்கு இருக்கும் கபரஸ்தானில் மரியம் பிச்சையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

0 comments:

MGR

MGR songs...