அ.தி.மு.க., வெற்றியை எந்த சக்தியாலும் தட்டிப்பறிக்க முடியாது: ஜெயலலிதா உறுதி

11:39 Edit This 0 Comments »
சென்னை : ""எவ்வளவு பணத்தை கொட்டினாலும் மக்கள் மனதை வாங்க தி.மு.க.,வால் முடியாது. அ.தி.மு.க., வெற்றியை எந்த சக்தியாலும் தட்டிப்பறிக்க முடியாது,'' என, ஜெயலலிதா பேசினார்.

அ.தி.மு.க., வேட்பாளர் பழ.கருப்பையா (துறைமுகம்), ஜெயக்குமார் (ராயபுரம்), குப்பன் (திருவொற்றியூர்), வெற்றிவேல் (ஆர்.கே.நகர்), நீலகண்டன் (திரு.வி.க.,நகர்), மற்றும் பெரம்பூர் மார்க்சிஸ்ட் கம்யூ., வேட்பாளர் சவுந்தரராஜனை ஆதரித்து ஜெயலலிதா நேற்று வடசென்னை முழுவதும் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

தமிழகத்தை காப்பாற்றுங்கள் என்ற கோரிக்கையுடன், உங்கள் முன் வந்துள்ளேன். ஒரு குடும்ப ஆட்சியின் சர்வாதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க உங்களை நாடி வந்துள்ளேன். கடுமையான மின்வெட்டு, மணல் கொள்ளை, ரவுடியிசம், தமிழகத்தில் யாரும் எந்த தொழிலையும் சுதந்திரமாக செய்ய முடியாத நிலை, கள்ளச் சாராயம், கள்ள லாட்டரி என, அனைத்து சமூக விரோத தொழில்களும், தி.மு.க., ஆட்சியில் நடக்கிறது.இந்த அவலங்களிலிருந்து, இந்த தேர்தல் மூலம் தமிழகத்தை மக்கள் மீட்டெடுக்க வேண்டும். இப்போது மீட்க முடியாவிட்டால், எப்போதும் மீட்க முடியாது என்று நல்லோரின் மனசாட்சிகள் சொல்கின்றன. ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்தவர்களுக்கு, இந்த தேர்தலில் தகுந்த தண்டனை தர வேண்டும். தி.மு.க.,வினரின் ஊழல் சாம்ராஜ்யத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் அகற்ற வேண்டும்.

தமிழகத்தை ஒரு லட்சம் கோடி கடனுக்குள் சிக்கவைத்தது தான் கருணாநிதியின் சாதனை. மக்கள் பணத்தை பேராசை கொண்ட கும்பல் சுரண்டுகிறது. இதை தடுக்க தி.மு.க.,கூட்டணியினர் போட்டியிடும், அனைத்து இடங்களிலும் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் வகையில், அவர்களை டிபாசிட் இழக்க செய்ய வேண்டும்.இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடக்காத ஊழலை தி.மு.க.,வினர் நிகழ்த்தியுள்ளனர். ஊழலுக்கு நிகர் ஊழல் செய்பவர் கருணாநிதி. அவர் விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்வதில் வல்லவர் என, சர்க்காரியா கமிஷன் கூறியது.

தேர்தலில் தோற்பது உறுதி என, தெரிந்து கொண்ட தி.மு.க.,வினர் 234 தொகுதிகளிலும் மழையாக பணத்தை கொட்டியுள்ளனர். இந்த பணமழைக்கு அ.தி.மு.க., வேட்பாளர்களும், நிர்வாகிகளும், கூட்டணி கட்சியினரும் மலைத்து போகவோ, கலக்கமடையவோ வேண்டாம். எவ்வளவு பணத்தை கொட்டினாலும், மக்கள் மனதை வாங்க தி.மு.க.,வால் முடியாது. அ.தி.மு.க., வெற்றியை இம்முறை யாரும் தட்டிப்பறிக்க முடியாது.அ.தி.மு.க., ஆட்சி மீண்டும் அமைந்ததும் மக்களின் அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்படும். மீன் பிடிக்க தடைகாலத்தில் 2,000 ரூபாய் உதவித்தொகை, மீன்பிடிக்க இயலாத மழைக்கால உதவியாக 4,000 ரூபாய் வழங்கப்படும். மீனவர்கள் நலன் காக்கப்படும். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கப்படும். இதுகுறித்த வரைமுறைகளை ஆய்வு செய்து முடிவெடுக்க தனியே குழு அமைக்கப்படும். இன்னும் மக்களுக்கு என்னென்ன தேவைகள் உள்ளதோ அனைத்தும் செய்து தரப்படும்.இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

தி.மு.க., மிரட்டல்: ஜெ.,திடுக் : "மதுரையில் தேர்தல் பணியில் ஈடுபடுவோர் தி.மு.க.,வினரால் மிரட்டப்படுகின்றனர். தமிழகம் முழுவதும் தி.மு.க.,வினரின் மிரட்டலால் தேர்தல் அதிகாரிகள் மத்தியில் அச்சத்தால், ஒரு வித பதட்டம் நிலவுகிறது. அவர்கள் நேர்மையாகவும், நியாயமாகவும் தேர்தல் பணியாற்றுவர். அவர்களுக்கு தேவையான பாதுகாப்பை தேர்தல் கமிஷன் தர வேண்டும்' என ஜெயலலிதா பேசினார்.


வடிவுடையம்மனை கும்பிட்ட ஜெ., : அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவின் இஷ்ட தெய்வம் திருவொற்றியூர் வடிவுடையம்மன். ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் இங்கு முக்கிய நபர்கள் வந்து சிறப்பு பூஜை செய்வது வழக்கம். டான்சி வழக்கில் அவரை சுப்ரீம் கோர்ட் விடுவித்த பத்தாவது நிமிடத்தில், வடிவுடையம்மன் கோவிலுக்கு பறந்து வந்து, அம்மனை தரிசித்தார். "கடவுளுக்கு நன்றி' என, அப்போது நிருபர்களிடம் கூறினார்.

இந்நிலையில், அ.தி.மு.க., வேட்பாளர் குப்பனை ஆதரித்து பிரசாரம் செய்ய வந்த ஜெயலலிதா, தேரடியில் வடிவுடையம்மன் கோவிலைப் பார்த்தவாறு பிரசாரம் செய்தார். இறுதியில், அம்மனை கையெடுத்து கும்பிட்டு தனது பிரசாரத்தை நிறைவு செய்தார்.திருவொற்றியூர் தொகுதியில் வெற்றி பெறும் அணி தான், ஆட்சியைப் பிடிக்கும் என்பது நம்பிக்கை; இதுவரை அப்படித்தான் நடந்துள்ளது என்பதால், ஜெ., அம்மனை வழிபட்டு பிரசாரம் செய்தது, அ.தி.மு.க.,வினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

என் "இமேஜை', "டேமேஜ்' செய்கின்றனர்: விஜயகாந்த்.

21:13 Edit This 0 Comments »

பட்டுக்கோட்டை: "" அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, கேபிள் "டிவி' அரசுடமையாக்கப்படும் என்றதும், ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எனவே, என்னை குறிவைத்து என் இமேஜை டேமேஜ் செய்கின்றனர்,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.

தஞ்சை மாவட்டம், பேராவூரணியில் நடந்த கூட்டத்தில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசியதாவது: கடந்த உள்ளாட்சி தேர்தலின்போது கருணாநிதி, "லோக்சபா, சட்டசபை தேர்தலில் தேர்ந்தெடுத்தீர்கள். அதுபோல, உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுத்தால் உங்கள் தேவை அனைத்தையும் எங்களால் செய்துதர முடியும்' என்றார்.அப்படி கூறியவரால், ஏன் காவிரியில் நீரை பெற்றுத்தர முடியவில்லை. முல்லைப் பெரியாறு அணை உயரத்தை உயர்த்த நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடியவில்லை. கடந்த 2006ல் நடந்த தேர்தலில் நான் தனியாக நின்றதால் என்னை விமர்சித்து யாரும் பேசவில்லை. தேர்தல் அறிவிப்புக்கு முன், நான் பேரத்துக்கு கட்டுப்படாததால் தற்போது @வறு வழியில் இறங்கி விட்டனர் . அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, கேபிள் "டிவி' அரசுடமையாக்கப்படும் என்றதும், அதை ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் என்னைக் குறிவைத்து என் இமேஜை டேமேஜ் செய்கின்றனர். நீங்கள் செய்யும் ஊழல்களுக்கு எல்லாம் கட்டாயம் சிறை செல்லப்போவது உறுதி. அது உங்கள் கூட்டணி கட்சியினரால் (காங்கிரஸ்) நடக்கும். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

VOTE FOR AIADMK

23:11 Edit This 0 Comments »

MGR 2011

22:08 Edit This 0 Comments »

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற அதிமுகவுக்கு ஒரு சான்ஸ் கொடுங்க: நடிகர் ஆனந்த்ராஜ்

02:25 Edit This 0 Comments »
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற அதிமுகவுக்கு மக்கள் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று நடிகர் ஆனந்த்ராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
நேற்று வேடசந்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பழனிச்சாமியை ஆதரித்து நடிகர் ஆனந்த்ராஜ் திறந்த வேனில் பிரசாரம் செய்தார். அவர் வேடசந்தூர், எரியோடு, பூத்தாம்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது,
அதிமுக தேர்தல் அறிக்கையில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச கம்யூட்டர் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு்ள்ளது. அவர்கள் ஓட்டு போடுவார்கள் என்ற எதிர்பார்ப்பிலா ஜெயலலிதா அறிவித்துள்ளார். ஆனால் கருணாநிதியோ கல்லூரி மாணவர்கள் ஓட்டு போடுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் அவர்களுக்கு மட்டும் இலவச லேப்டாப் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார்.
திமுக தேர்தல் அறிக்கையில் தாய்மார்களுக்கு மிக்சி அல்லது கிரைண்டர் வழங்கப்படும் என்று தான் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜெயலலிதாவோ மிக்சி, கிரைண்டர் இரண்டும் வழங்கப்படும் என்று கூறியிருக்கிறார். மேலும், தாய்மார்கள் மிக்சி, கிரைண்டர் பயன்படுத்தும்போது வியர்க்காமல் இருக்க மின்விசிறியையும் சேர்த்து தருவதாக கூறியுள்ளார்.
அனைத்து தரப்பு மக்களின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு வெளியிடப்பட்டுள்ளது அதிமுக தேர்தல் அறிக்கை. எனவே, அனைவரும் அதிமுக வேட்பாளர் பழனிச்சாமிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். நாங்கள் வெற்றி பெற்ற பிறகு இதே இடத்தில் மேடை போட்டு நாங்கள் கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றார்.

வடிவேலு அடி வாங்குற நேரம் நெருங்கிடுச்சி: விந்தியா

02:22 Edit This 0 Comments »
சினிமாவில் அடிவாங்கி காமெடி பண்ணும் வடிவேலு நிஜத்தில் அரசியலில் அடி வாங்குற நேரம் வந்துடுச்சி என்று நடிகை விந்தியா கூறியுள்ளார். அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நடிகை விந்தியா, வடிவேலுவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசி வருகிறார்.
நடிகர் வடிவேலு, விஜயகாந்தைப் பற்றி ஏக வசனத்தில் பேசி பிரசாரம் செய்து வருகிறார். அவரது பிரசாரத்தை கட்சி பாகுபாடு இல்லாமல் ஏராளமானோர் திரண்டு வந்து பார்த்து சிரிக்கிறார்கள். வடிவேலுவின் பிரசாரம் மக்களை எளிதில் சென்று வருவதாலோ என்னவோ ஆளும்கட்சி தொலைக்காட்சிகளில் வடிவேலு பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
இதுஒருபுறம் இருக்க, திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் வடிவேலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை விந்தியா பிரசாரத்தில் குதித்துள்ளார். நேற்று அவர் ‌பிரசாரத்தின்போது பேசுகையில், வடிவேலு ஒரு காமெடி பீஸ். அவரால திமுகவும் இப்போ காமெடி பீஸா தெரியுது. திமுககிட்ட எவ்வளவு வாங்குனாரோ தெரியல. வாங்குனதுக்கு வஞ்சமில்லாம பேசிக்கிட்டு திரியறாரு. இவரு வந்து கேப்டனை ஒழிச்சிக் கட்டுவாராம். இதை விட மிகப் பெரிய காமெடி ஒண்ணுமே இல்லைங்க. சினிமாவில கூட இந்த மாதிரி காமெடியை நான் பார்த்ததில்லை. மக்களுக்கு நல்லது செய்ய அம்மாவுடன் சேர்ந்திருக்கிற நல்லவர் கேப்டன். கேப்டனின் லெக் கிக்; பஞ்ச் பவர் பற்றி தமிழ்நாட்டில் எல்லோருக்கும் தெரியும். பொதுவா சினிமாவில் வடிவேலு அடி வாங்கி அடி வாங்கித்தான் காமெடி பண்ணூவார். அவர் அரசியலில் இன்னும் அடிவாங்கல. இப்போ அதுக்கான நேரம் வந்துடுச்சி போலிருக்கு. அடி வாங்குறதுக்காகத்தான் இப்படி பேசுறாரு, என்றார்.

விஜயகாந்தை விமர்சிக்க வடிவேலுக்கு தகுதியில்லை! – சிங்கமுத்து ஆவேசம்

02:19 Edit This 0 Comments »
திமுகவுக்கு ஆதரவாக அனல் பறக்கப் பேசி வரும் வடிவேலுவுக்கு எதிராக தேர்தல் பிரச்சாரத்தில் குதித்துள்ளார் காமெடி நடிகர் சிங்கமுத்து.
சினிமாவில் காமெடியில் இணைந்து கலக்கியவர்கள் நடிகர் வடிவேலுவும் சிங்கமுத்துவும். நிலம் வாங்கி விற்றதில் இருவரும் எதிரிகள் ஆனார்கள். வடிவேலுவை கோடிக்கணக்கில் சிங்கமுத்து மோசடி செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சிங்கமுத்து கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் இருந்தார். இப்போது ஜாமீனில் வெளி வந்துள்ளார்.
இந்த நிலையில் நடிகர் வடிவேலு தி.மு.க.வுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் குதித்தார். தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசிவரும் வடிவேலு, விஜயகாந்தை ஒவ்வொரு கூட்டத்திலும் வெளுத்து வாங்குகிறார்.
வடிவேலுக்கு எதிராக யார் யாரையோ களமிறக்கிப் பார்க்கிறது அதிமுக. நடிகை விந்தியா, நடிகர் ராதாரவி ஆகியோர் வடிவேலுவை மட்டும் குறி வைத்துத் தாக்கி வருகின்றனர். ஆனாலும் வடிவேலுவின் பேச்சுக்கு முன் எதுவும் எடுபடவில்லை என்பதே உண்மை.
எனவே, வடிவேலுவின் எதிரியான சிங்கமுத்துவை களம் இறக்கியுள்ளது அதிமுக. இது தொடர்பாக, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்தார் சிங்கமுத்து. உடனே அவரை பிரசார களத்தில் இறங்குமாறு அ.தி.மு.க. உத்தரவிட்டுள்ளது. 1989-லிருந்து சிங்கமுத்து அதிமுகவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று மாலை சென்னையில் தனது முதல் பிரச்சாரத்தைத் தொடங்கினார் சிங்கமுத்து. ஆயிரம் விளக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பா.வளர்மதியை ஆதரித்து கிரீம்ஸ் ரோட்டில் பிரசாரம் செய்தார்.
வடிவேலுக்கு பதிலடி கொடுக்க சிங்கமுத்து களம் இறங்கியதால் தேர்தல் பிரசார களம் சூடுபிடித்துள்ளது. இந்தப் பிரச்சாரத்தில் நடிகர் சிங்கமுத்து பேசுகையில், “திமுக ஆட்சியில் இதற்கு மேலும் துன்பப்பட முடியாது. எனவேதான் மாற்றத்தை ஏற்படுத்த தமிழக மக்கள் விரும்புகிறார்கள். விலைவாசி உயர்வு, மின் வெட்டால் மக்கள் அவதிப்படுகிறார்கள். புரட்சித் தலைவியால்தான் தமிழக மக்களைக் காப்பாற்ற முடியும்.
வுடிவேலு பற்றிப் பேசுவதே அசிங்கம்….
தி.மு.க.வினருக்கு மக்கள் மீது அக்கறை இல்லை. 2ஜி ஊழலிலிருந்து தப்பிப்பதுதான் அவர்கள் கவலை. புதிதாக ஒரு நடிகர் (வடிவேலு) வந்துள்ளார். அவரைப் பற்றி பேசுவதே அசிங்கம். விஜயகாந்த் சினிமாவில் சம்பாதித்து விட்டுத்தான் அரசியலுக்கு வந்துள்ளார். அவரைப்பற்றி இவர் விமர்சிக்கிறார்.
நிதானமில்லாமல் விஜயகாந்த் பேசுகிறாராம். நீ எப்பப்ப நிதானமாய் இருப்பாய் என்று எனக்குத்தானே தெரியும். கட்டிய வேட்டியோடு சென்னைக்கு வந்தாய். ஒரு சோப்பை நாலாக வெட்டி வேட்டியை துவைத்து கட்டினாய். விஜயகாந்தை பற்றி விமர்சிக்க உனக்கு எந்த தகுதியும் இல்லை. பா வளர்மதி எம்ஜிஆர் ஆசிபெற்றவர். அமைச்சராக இருந்தவர். ஒரு நல்ல வேட்பாளரை புரட்சித்தலைவி தந்துள்ளார். பா.வளர்மதியை வெற்றி பெற செய்யுங்கள்…”, என்றார்.இவ்வாறு அவர் பேசினார்.

வடிவேலுவோட இருந்தா செத்துருப்பேன்! சிங்கமுத்து உருக்கம்!!

02:15 Edit This 0 Comments »
எனக்கும், வடிவேலுவுக்கும் சண்டை வரலைன்னாலும் நானே அங்கிருந்து விலகி வந்திருப்பேன். ஏன்னா, அவரோட மேனேஜர்கள் எல்லாரும் வரிசையா செத்துக்கிட்டே இருந்தாங்க. இப்பகூட அவரோட நடிச்ச நடிகை ஒருவர் இறந்துட்டாரு. நானும் அவர் கூட இருந்திருந்தா செத்துருப்பேன் என்று நடிகர் சிங்கமுத்து தேர்தல் பிரசாரத்தில் உருக்கமாக கூறி வருகிறார்.
திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் களமிறங்கி எதிர்க்கட்சியினரை… குறிப்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்தை லெப்ட் ரைட் வாங்கிக் கொண்டிருக்கிறார் காமெடி நடிகர் வடிவேலு. வடிவேலுவின் அனல் கக்கும் ‌காமெடி பிரசாரத்துக்கு எதிராக நடிகை விந்தியாவை களமிறக்கியது அதிமுக. ஆனாலும் அவரது பேச்செல்லாம் வடிவேலுவின் மாஸ் பேச்சில் எடுபடாமல் போனது. இதனால் வடிவேலுக்கு எதிராக பேசும் நேரடி சக்தியாக இருக்கும் காமெடி நடிகர் சிங்கமுத்துவை நாடியது அதிமுக. போயஸ் கார்டனில் இருந்து அழைப்பு வந்ததும் ஓடிப்‌போய் ஜெயலலிதாவை பார்த்த சிங்கமுத்து, அடுத்த கனமே பிரசார களம் இறங்கினார்.
வடிவேலு தன் பிரசாரத்தின்போது பெரும்பாலும் விஜயகாந்தை நைய புடைத்து வருவது போலவே, சிங்கமுத்து தன் பிரசாரத்தில் வடிவேலுவை நைய புடைக்க ஆரம்பித்து விட்டார். என்னவொரு வித்தியாசம் என்றால் வடிவேலுவின் பிரசாரம் காமெடி ரகம்; சிங்கமுத்துவின் பிரசாரம் சீரியஸ் ரகம். சென்னையில் நடந்த பிரசாரத்தில் சிங்கமுத்து பேசுகையில், புதிதாக ஒரு நடிகர் (வடிவேலு) வந்துள்ளார். அவரைப் பற்றி பேசுவதே அசிங்கம். விஜயகாந்த் சினிமாவில் சம்பாதித்து விட்டுத்தான் அரசியலுக்கு வந்துள்ளார். அவரைப்பற்றி இவர் விமர்சிக்கிறார். நிதானமில்லாமல் விஜயகாந்த் பேசுகிறாராம். நீ எப்பப்ப நிதானமாய் இருப்பாய் என்று எனக்குத்தானே தெரியும். கட்டிய வேட்டியோடு சென்னைக்கு வந்தாய். ஒரு சோப்பை நாலாக வெட்டி வேட்டியை துவைத்து கட்டினாய். விஜயகாந்தை பற்றி விமர்சிக்க உனக்கு எந்த தகுதியும் இல்லை, என்றார்.
இன்னொரு இடத்தில் சிங்கமுத்து பேசும்போது, வடிவேலு பேசுறதெல்லாம் நானும் பார்த்துகிட்டுதான் இருக்கேன். என்னத்தை சொல்றது? சொந்த பிரச்சனையை மனசுல வச்சுகிட்டு பேசுறது சரியா, நீங்களே சொல்லுங்க. அவருக்கும் விஜயகாந்துக்கும் ஏதோ பிரச்சனை. அதுக்காக திமுக மேடையை பயன்படுத்துறார்னுதான் தோணுது. அப்படியே பேசினாலும், ஒரே துறையில இருக்கிற அவரை இவ்வளவு தரம் தாழ்ந்து விமர்சிக்கறது சரியா படலை. அதுவும் அவரு விஜயகாந்த்தை அந்த பீஸ, இந்த பீஸ் என்று சொல்றதையெல்லாம் கேட்கவே கஷ்டமாதான் இருக்கு. எனக்கும் அவருக்கும் சண்டை வரலைன்னாலும் நானே அங்கிருந்து விலகி வந்திருப்பேன். ஏன்னா, அவரோட மேனேஜர்கள் எல்லாரும் வரிசையா செத்துக்கிட்டே இருந்தாங்க. இப்ப கூட அவரோட நடிச்ச நடிகை ஒருவர் இறந்துட்டாரு. அந்தளவுக்கு பவர்ஃபுல் ஜாதகம் அவருக்கு. ஜாதகம்னு சொன்னதும்தான் ஞாபகம் வருது. இந்தாளுக்கு இப்ப பாத சனி நடக்குது. ஒரு வழி பண்ணாம விடாது. தப்பு தப்பாதான் பேச சொல்லும். நடக்க சொல்லும். போக போக எல்லாரும் பார்க்கதானே போறீங்க. நான் இப்போது முப்பதைந்து படத்துல நடிச்சுகிட்டு இருக்கேன். வடிவேலுவுக்கு ஒரு படம் கூட இல்லை. அதான் நேரம்ங்கிறது, என்றார்.

கசக்கும் உண்மைகளும், சில நகைச்சுவைகளும் : நெல்லைக்கண்ணன் All tamilars must read it.

00:24 Edit This 0 Comments »

உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேல், காந்தியின் பாதுகாப்பிற்காக ராணுவத்தை அனுப்பி வைத்தார். காந்தியை தொடர்ந்து கலெக்டரும், ராணுவமும் போகின்றனர். கலெக்டரிடம் காந்தியடிகள் கேட்கிறார், "எதற்காக ராணுவம்?' கலெக்டரும், "உங்கள் பாதுகாப்பிற்காக' என்கிறார். "என் நாட்டு மக்களிடம் போகிறேன். அதற்கு எனக்கு பாதுகாப்பா? உடனடியாக ராணுவத்தை திருப்பி அனுப்புங்கள்' என்று அங்கேயே நின்று விட்டார். ராணுவம் திருப்பி அனுப்பப்பட்ட பிறகு தான் காந்தியடிகள் நவகாளிக்குள் சென்றார். 
திருநெல்வேலியில் பொதுக்கூட்டம் பேச, ஈ.வெ.ரா., வருகிறார். வயது 93. ஒரு குறிப்பிட்ட இனத்தவரை ஏதோ தவறுதலாக சொல்லி விட்டார் என்று, மதுரையில் அவரது கூட்டத்தில் தகராறு. ஆகவே, திருநெல்வேலியில் ஆபத்து ஏற்படும் என கருதிய முதல்வர் கருணாநிதி அரசு, கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தது.
ஏராளமான காவலர்கள், அதிகாரிகள், ஈ.வெ.ரா., பேசுகிற இடத்திற்கு பின்னால் இருந்த ஓர் அரண்மனையில், நீதிபதியே வந்து அமர்ந்திருந்தார். துப்பாக்கிச் சூடு உத்தரவு தருவதற்காக. அந்த சிங்கம் மேடைக்கு வந்தவுடன், "எல்லா போலீஸ்காரங்களும் உடனே போயிருங்க. நீதிபதி அய்யா அவர்களையும் நான் கேட்டுக்கறேன்.
நீங்களும் போயிருங்க. யாருக்காக பாடுபடறேனோ, அவங்களே என்னை கொல்லப் போறாங்கன்னா கொல்லட்டும்' என்றார். பாதுகாப்பிற்காக வந்த அத்தனை காவலர் படையும் போன பின்னர், நீதிபதியும் போன பின்னரே ஈ.வெ.ரா., பேசினார்.
காமராஜர் முதல்வராகி வெளியில் கிளம்புகிறார். அவருக்கு முன், காவல் அதிகாரிகள் ஒரு காரில் சங்கு ஒலிக்க கிளம்புகின்றனர். காமராஜர், தனது உதவியாளரை விட்டு, அவர்களை கூப்பிட்டார். "எதுக்கு சங்குன்னேன்? நான் உயிரோடு தானே இருக்கேன்'.
"அய்யா பாதுகாப்பிற்காக' என்று பதில் தருகின்றனர். "அவங்க தானே என்னை முதல்வராக்கி இருக்கின்றனர். அவங்க மத்தியிலேயே இந்த பந்தாவெல்லாம் வேண்டாம். போங்க போங்க... வேற வேலை ஏதாவது இருந்தா பாருங்க' என்றார்.
இன்று மத்திய அமைச்சர் அழகிரி வீட்டின் பாதுகாப்பு தேர்தல் கமிஷனால் குறைக்கப்பட்டவுடன் அவர் கூறுகிறார். "எனக்கு ஏதேனும் ஆபத்து என்றால் தேர்தல் கமிஷன் தான் பொறுப்பு' என்கிறார். 
அப்படியென்றால், "200 இடங்களில் வெற்றி பெறுவோம்' என அதே அழகிரி சொல்வது எப்படி உண்மையாக இருக்க முடியும்? 200 இடங்களிலே வெற்றி என்றால், மக்கள் அவர்கள் பக்கம் தானே. பிறகு எதற்கு பாதுகாப்பு?
நகைச்சுவைகள்: திரைப்பட நடிகைகள், நடிகர்கள் தேர்தலில் பேசுகின்றனர். கற்பை கொச்சைப்படுத்தி ராமதாசாலும், திருமாவளவனாலும் கடுமையாக தமிழுணர்வோடு கண்டிக்கப்பட்டு, நீதிமன்றங்களிலும் நிறுத்தப்பட்ட குஷ்பு, தி.மு.க.,விற்கு ஓட்டளித்தால், நமக்கு அவரை போலவே குழந்தை பிறக்கும் என உத்தரவாதம் அளிக்கிறார். இன்றும், பா.ம.க., தலைவர் மணி போட்டியிடும் மேட்டூர் நீதிமன்றத்தில் குஷ்பு மீது, கற்பு வழக்கு நிலுவையில் இருக்கிறது.
"முதல்வர் கருணாநிதி பெரிய ராஜதந்திரி' என்று இளங்கோவன் சொல்கிறார். தேர்தலுக்கு முன், "தி.மு.க.,வோடு கூட்டணியே கூடாது' என்று, பெரிய அறிக்கைகளில் வாழ்ந்து கொண்டிருந்தாரே... அவரே தான்.
அதை விடச் சிறப்பு, அவர் தந்தை சம்பத் எம்.பி.,யாக தி.மு.க.,வினரால் தேர்ந்தெடுக்கப்பட்டு, பரந்துபட்ட அரசியலை டில்லியில் பார்த்து, காங்கிரசில் இணைந்தவுடன், கருணாநிதி, "பார்லிமென்டின் பெரிய கட்டடத்தை பார்த்தவுடன் சம்பத் மயங்கி விட்டார்' என்று அறிக்கை விட்டார்.
சம்பத் அதற்கு பதில் சொன்னார், "எங்கள் மாவட்டத்திலேயே பெரிய அரண்மனையிலே பிறந்தவன் நான். கருணாநிதிக்கு தான் பெரிய கட்டடங்கள் வியப்பை தரும்' என்று. இளங்கோவன், தன் தாயாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். ஆனால், அதுவும் முடியாத சூழல். கருணாநிதியோ இளங்கோவனை, தன் மடியில் தவழ்ந்த குழந்தை என்று போற்றி விட்டார்.
இவை எல்லாவற்றையும் விட மிகப்பெரிய நகைச்சுவை, உள்துறை அமைச்சர் பொருளாதார மேதை சிதம்பரம், "தேர்தல் கமிஷன் திருமண வீட்டை வேறு வீடாக்கப் பார்க்கிறது' என்கிறார். மேற்கு வங்கத்தில் மம்தா சொல்லவில்லை. 
கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணி தோழர்கள் சொல்லவில்லை. சகவாச தோஷம், பெரிய மேதையான அவரும் புலம்புகிறார். ராமதாசும் குற்றம் சாட்டுகிறார். பென்னாகரம் தேர்தலிலே, ஆளுங்கட்சியை குற்றம் சாட்டியவர். சிரிப்பாக தான் வருகிறது. திருமங்கலமும், திருச்செந்தூரும், பென்னாகரமும் தானே இத்தனைக்கும் காரணம்.

அ.தி.மு.க., கூட்டணியில் மீண்டும் வைகோ: போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதாவுடன் சந்திப்பு

00:40 Edit This 0 Comments »
அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவை நேற்று இரவு ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ திடீரென சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதன் மூலம், அ.தி.மு.க., - ம.தி.மு.க.,வுடனான ஊடல் நேற்று முடிவுக்கு வந்தது.

சென்னையில் இன்று பத்திரிகையாளர்களை சந்திக்கும் வைகோ, அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்ற வேண்டுமென, ம.தி.மு.க., தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுக்கவுள்ளார் என, அ.தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றிருந்த ம.தி.மு.க.,வுக்கு 21 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என வைகோ விடுத்த கோரிக்கையை ஜெயலலிதா ஏற்கவில்லை. 9 தொகுதிகள் வரை மட்டுமே வழங்க முடியும் என அ.தி.மு.க., தெரிவித்ததால், தேர்தலைப் புறக்கணிக்க ம.தி.மு.க., முடிவு செய்தது. இந்த அறிவிப்பை வெளியிட்டுவிட்டு சொந்த ஊருக்கு சென்ற வைகோ, அங்கு இரு நாட்கள் தங்கியிருந்தார். பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், "யாருக்கு நாங்கள் ஓட்டளிப்பது' என தொண்டர்கள் கேட்டதையடுத்து அவர்களுக்கு உரிய வழிகாட்டுதலுக்காக மாவட்டவாரியாக, சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் வைகோ திட்டமிட்டிருந்தார். ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு அவர் சென்று திரும்பியுள்ளார்.

இதற்கிடையில், "தேர்தல் புறக்கணிப்பு மூலமாக, மீண்டும் தி.மு.க., வெற்றி பெறுவதற்கு நாமே காரணமாக மாறிவிடும் அபாயம் இருக்கிறது. இதைத் தடுக்கும் வகையில், பொதுச் செயலர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வலியுறுத்தி, கோவை, மதுரை, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களின் செயலர்கள், வைகோவிற்கு கடிதம் எழுதியுள்ளனர். அ.தி.மு.க., வட்டாரத்திலிருந்தும் வைகோவிற்கு சமிஞ்சைகள் அனுப்பப்பட்டுள்ளன. "புதிய பார்வை' இதழின் ஆசிரியர் நடராஜன் சமீபத்திய பேட்டியின்போது, "வைகோவை அ.தி.மு.க., இழந்திருக்கக் கூடாது' என்று வெளிப்படையாக தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, அ.தி.மு.க.,வின் இரண்டாம்கட்டத் தலைவர்கள், வைகோவுடன் பேசுவதற்கு தொடர் முயற்சி எடுத்து வந்தனர். ஆனால், "உங்களால் எந்த முடிவும் எடுக்க முடியாது என்கிறபோது, உங்களிடம் பேசுவதில் பலனில்லை. எங்கள் கட்சியின் மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை நானாக மாற்றுவதற்கில்லை' என்று, வைகோ தெரிவித்துள்ளார். வேலூரில் பிரசாரத்தில் இருந்த ஜெயலலிதாவிற்கு இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பார்வதி அம்மாள் அஸ்தி கரைப்பு நிகழ்ச்சிக்காக கன்னியாகுமரி சென்றிருந்த வைகோவிடம், நேற்று மதியம் 2 மணிக்கு ஜெயலலிதா, டெலிபோனில் பேசியுள்ளார். 10 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நீடித்த நிலையில், நேரில் வந்து சந்திப்பதாக வைகோ கூறியுள்ளார்.

கன்னியாகுமரியில் மாலை 4 மணிக்கு நடந்த அஸ்தி கரைப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற வைகோ, அங்கிருந்து கார் மூலம் மதுரை விரைந்தார். மதுரையில் இருந்து இரவு 8.55 மணிக்கு சென்னை புறப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் இரவு 10.15 மணிக்கு சென்னை வந்தடைந்தார். அங்கிருந்து கிளம்பி, இரவு 11 மணிக்கு போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டிற்கு வந்தார். ஜோலார்பேட்டை, வேலூரை அடுத்து, காஞ்சிபுரத்தில் நேற்று இரவு பிரசாரத்தில் ஈடுபட்ட ஜெயலலிதா, பிரசாரத்தை முடித்துவிட்டு போயஸ் தோட்டம் திரும்பியிருந்தார். இருவரும் 15 நிமிடங்கள் நேருக்கு நேர் பேசினர். தகவல் தெரிந்த பத்திரிகையாளர்கள், வெளியில் வந்த வைகோவிடம் பேட்டி எடுக்க முயன்றனர். ஆனால், வைகோ காரை நிறுத்தாமல் சென்றுவிட்டார். அ.தி.மு.க., கூட்டணி வெற்றிக்கு பாடுபடுமாறு, இன்று தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு விடுப்பார் என, தாயக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

"நம்புவதே வழி என்ற மறைதனை நாம் இன்று நம்பி விட்டோம்' என்ற பாரதியாரின் கவிதை வரியை வாசகர்களுக்கு நினைவுபடுத்துகிறோம். அரசியலில் எதுவும் சாத்தியம்; எவருக்கும் வழியும் கிடையாது, மறையும் கிடையாது என்று நம்ப வைத்துள்ளது தற்போதைய அரசியல் போக்கு. எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும், எப்படியும் மே 13ம் தேதிக்குப் பின், மக்களை முட்டாளாக்கத்தான் போகின்றனர். அதைத் தாங்கும் அளவுக்கு மக்களுக்கு ஒரு மனோதைரியத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தின் விளைவே இச்செய்தி. ஒருவேளை உண்மையிலேயே இப்படி ஒரு சந்திப்பு நடந்துவிட்டால், "தினமலர்' பொறுப்பல்ல."அரசியல்வாதிகளைப் போல் நீங்களும் எங்களை முட்டாளாக்கலாமா' என்று கோபப்படும் வாசகர்களுக்கு, ஏப்ரல் முதல் நாள் வாழ்த்துக்கள்...!


Icon

MGR

MGR songs...