விஜய் ஆதரவு மட்டும்தான்; அதிமுகவுக்கு பிரச்சாரம் இல்லை!-எஸ்ஏ சந்திரசேகரன்

15:42 Edit This 0 Comments »
சென்னை: இந்தத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவளிப்பார் விஜய். ஆனால் களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்யவாரா என்று தெரியவில்லை என்று இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகரன் தெரிவித்தார்.


நடிகர் விஜயின் தந்தையும், விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளருமான ஏ.எஸ்.சந்திரசேகரன் சென்னையில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார்.

அப்போது தனது அதிமுக ஆதரவு குறித்து அவர் கூறுகையில், "மக்கள் இயக்கம் ஒரு அரசியல் இயக்கம் அல்ல. நானும், என் மகன் விஜயும் அரசியல்வாதிகள் அல்ல. இதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் சினிமா கலைஞர்களாகவே இருக்க விரும்புகிறோம்.

ஜனநாயக நாட்டில் எல்லா தரப்பு மக்களும் சுதந்திரமாக வாழ வேண்டும். அதற்கு தமிழகத்தில் ஒரு அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும். இது தான் எங்கள் இயக்கத்தின் லட்சியம். இதற்காக அ.தி.மு.க.விற்கு ஆதரவு அளித்து இருக்கிறோம்.

அ.தி.மு.க.விற்கு ஆதரவளிப்பது என்ற முடிவை நானோ, விஜயோ தன்னிச்சையாக எடுத்த முடிவு இல்லை. நிர்வாகிகளை அழைத்து அவர்களின் கருத்துப்படி கேட்டுத்தான் இந்த முடிவை எடுத்தோம்.

நடிகர் விஜய் அ.தி.மு.க.வை ஆதரித்து பிரசாரம் செய்வாரா என்று கேட்கிறார்கள். விஜய் தலைமையிலான மக்கள் இயக்கம் அ.தி.மு.க.வை ஆதரிக்கிறது. தேர்தலுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளன. அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து நான் பிரசாரம் செய்ய இருக்கிறேன். விஜய் எப்போது, எப்படி பிரசாரம் செய்வார் என்பது பற்றி எனக்கு தெரியாது. அதை அவர்தான் சொல்ல வேண்டும். இப்போது ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார் அவர். பிரச்சாரம் சாத்தியமா என்று தெரியவில்லை.



சேலம் மாவட்டத்தில் ரசிகர்கள் சிலர் விஜய்யின் அதிமுக ஆதரவு நிலையை எதிர்த்து மன்ற உறுப்பினர் கார்டுகளை எரித்ததாகக் கூறப்படுவது தவறு. வேண்டுமென்றே உறுப்பினர் இல்லாதவர்களை அழைத்து இது போன்று செய்திருக்கிறார்கள்", என்றார்.

ஜெயலலிதா முதல்வராக வேண்டும்-கருணாநிதியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் – மயில்சாமி

19:23 Edit This 0 Comments »

சினிமா துறை உள்பட அனைத்து துறைகளிலும் கருணாநிதியின் குடும்பத்தினர் தலையீடு இருக்கிறது. இவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டும் என் தென்காசி தொகுதியி்ல் நடிகர் சரத்குமாரை ஆதரித்து இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்த காமெடி நடிகர் மயில்சாமி பிரசாரம் செய்தார்.
தென்காசியில் நடந்த பிரசாரத்தின்போது மயில்சாமி கூறுகையில்,
கருணாநிதி குடும்ப ஆட்சியை வீ்ட்டிற்கு அனுப்ப வேண்டும், சினிமா துறை மட்டுமல்லாமல் அனைத்து துறையிலும் கருணாநிதியின் குடும்ப தலையீடு இருக்கிறது. உழைத்து 500 ரூபாய் பெற்றாலும் அதற்கு கப்பம் கட்ட வேண்டியுள்ளது.
ஏமாந்தவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களுக்கு கொண்டாட்டம்தான். அப்படி ஏமாற்றுபவர்களை விரட்டியடிக்க வேண்டும். தமிழகத்தில் நல்லாட்சி மலரவும், மக்கள் வளமாக வாழவும், சட்டம், ஓழுங்கு சீராக இருக்கவும் ஜெயலலிதா முதல்வராக வரவேண்டும். அதற்கு தென்காசி தொகுதியில் சரத்குமாரை ஆதரிக்க வேண்டும்.
அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் ஓட்டு போட்டு அவரை அமோகமாக வெற்றி பெறச்செய்யும்படி கேட்டு கொள்கிறேன் என்றார் மயில்சாமி.

கூட்டணியை மாற்றிக் கொண்டே இருக்கும் பாமகவுக்கு குரங்கு குணம்: விஜயகாந்த்

13:58 Edit This 0 Comments »
கும்மிடிப்பூண்டி: குரங்கு மரம் விட்டு மரம் தாவுவது போல ஒவ்வொரு தேர்தலிலும் பாமக கூட்டணியை மாற்றிக் கொண்டே இருக்கிறது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.


கும்மிடிப்பூண்டி சட்டசபை தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் செய்தார். ஊத்துக்கோட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் விஜயகாந்த் பேசியதாவது,

பாமகவினர் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை நாட்டில் உள்ள மரங்களை எல்லாம் வெட்டி நாசமாக்கிவிட்டனர். இப்போது பசுமை தாயகம் என்ற பெயரில் அமைப்பு தொடங்கி மரம் நடச் சொல்கின்றனர்.

இதேபோன்று மதுவை ஒழிப்போம், டாஸ்மாக் கடைகளை விரட்டுவோம் என அன்று வீராப்புடன் முழங்கியவர்கள் இன்று டாஸ்மாக் கடைகளை நடத்தும் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளனர்.

குரங்கு மரம் விட்டு மரம் தாவுவது போல ஒவ்வொரு தேர்தலிலும் பாமக கூட்டணியை மாற்றிக் கொண்டே இருக்கிறது.

திமுக ஆட்சியில் விலை வாசி உயர்வு, மின்வெட்டு போன்ற பிரச்சனைகளால் பொதுமக்கள் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகியுள்ளனர். எனவே, இந்த தேர்தலில் திமுகவையும், அதன் கூட்டணிக் கட்சியான பாமகவையும் பொது மக்கள் விரட்டியடிப்பார்கள் என்றார்.

கூட்டணியை பிரிக்க சதி: விஜயகாந்த் குற்றச்சாட்டு

20:50 Edit This 0 Comments »
சென்னை: ""கூட்டணியை பிரிக்க சிலர் சதி செய்து வருகின்றனர். அதற்கு இடம் கொடுக்காமல், கூட்டணி கட்சி தொண்டர்கள் ஒன்று சேர்ந்து, வெற்றிக்கு பாடுபட வேண்டும்,'' என, திருத்தணியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறினார். திருத்தணி தொகுதியில் அ.தி.மு.க., கூட்டணி சார்பில் தே.மு.தி.க., வேட்பாளர் அருண் சுப்பிரமணியத்தை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், நான் அ.தி.மு.க., கூட்டணியில் சேரக்கூடாது என, பலர் எதிர்க்கட்சிகளிடம் 100 கோடி, 200 கோடி, 500 கோடி ரூபாய் பணம் வாங்கிவிட்டதாக வதந்தி பரப்பினர். மக்களிடம் கூட்டணி வைத்துள்ளேன். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. தமிழக மக்களுக்காக தான் அ.தி.மு.க.,வுடன் கூட்டு சேர்ந்தேன். இது எம்.ஜி.ஆர்., ஆரம்பித்த கட்சி என்பதால் தான் கூட்டணி வைக்க சம்மதித்தேன். கூட்டணி வைத்துள்ளதால் ஆட்சியில் பங்கோ, துணை முதல்வர் பதவியோ கேட்க மாட்டேன். ஏழைகளுக்கு தி.மு.க., ஆட்சியில் எந்தவித நன்மையும் செய்யவில்லை. விவசாயிகள் மின்தடையால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இந்த தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டு போட வேண்டும். தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று பேசினார்.

ஓட்டுக்கு ரூ.5,000: பண வினியோகத்தில் தி.மு.க., முதலிடம்

00:21 Edit This 0 Comments »

தி.மு.க., கூட்டணி, ஓட்டுக்கு, 5,000 ரூபாய் கொடுக்கும் பணியை துவங்கி விட்டது. பணப் பட்டுவாடாவை முடிக்க, இலக்கும் நிர்ணயித்து, வேலைகள் ஜரூராக நடந்து வருகின்றன. எதிரணியினர், வாக்காளர்களை அணுகுவதற்கு முன்பே, ஓட்டுகளை உறுதி செய்துவிட வேண்டும் என்று திட்டமிட்டு பணியாற்றி வருகின்றனர். வேட்பாளர் கவனிப்புக்காக, தி.மு.க., கூட்டணியில், தொகுதி வாரியாகத் தனிக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள், தொகுதியில் உள்ள வார்டு வாரியாக வேட்பாளர்களை, அவர்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கு ஏற்ப பிரித்துள்ளனர். இந்த குடியிருப்புகளில் உள்ள நலச்சங்க நிர்வாகிகளிடம், அக்குடியிருப்புகளில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பணத்தைக் கொடுத்து வருகின்றனர். ஜாதி வாக்காளர்கள் அதிகம் உள்ள பகுதிகளில், ஜாதி சங்கங்களின் கிளை நிர்வாகிகளிடம், வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பணப் பட்டுவாடா நடக்கிறது. தொழிற்கூடங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதிகளில், தொழிற்சங்கங்கள், வணிகர் சங்கங்களின் பிரதிநிதிகளிடம் பணப் பட்டுவாடா குழுக்கள், பணப் பரிவர்த்தனையை நடத்துகின்றன.

தேர்தல் கமிஷனின் கெடுபிடியால், போர்வேல் அமைத்துக் கொடுத்தல், குடிநீர் பைப் லைன் மற்றும் குடிநீர் தொட்டிகள் கட்டிக் கொடுத்தல் போன்றவை பெரும்பாலும் கைவிடப்பட்டு, நேரடியாக பணமே வழங்கப்படுகிறது. வாக்காளர்களிடம் உறுதி செய்கின்றனர்: அந்தந்தப் பகுதிக்கு ஏற்ப குடியிருப்பு நலச் சங்கம், ஜாதி சங்கங்கள், தொழிற் சங்கங்கள் மற்றும் வணிகர் சங்கங்கள் போன்ற அமைப்புகளிடம் வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, மொத்தமாக தொகையைக் கொடுத்தாலும், வாக்காளர்களுக்கு அத்தொகை சென்றடைந்ததா என்று பணப் பட்டுவாடா குழுக்கள் உறுதி செய்கின்றன. இதற்காக, பெண்களை உறுப்பினர்களாகக் கொண்டு பட்டுவாடாக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுக்கள், எந்தப் பகுதியில் பணப் பட்டுவாடாவை உறுதி செய்ய வேண்டுமோ, அப்பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில், வீடுவீடாகச் சென்று ஓட்டு சேகரிப்பது போல, வாக்காளர்களிடம் பணம் வந்து சேர்ந்ததா என, உறுதி செய்கின்றனர். உறுதி செய்யும் பணியில், ஆண்களை விட, பெண்களே பொருத்தமானவர்கள் என்றும் சந்தேகம் ஏற்படாது என்றும், அவர்களை நியமித்துள்ளதாகக் கூறுகின்றனர்.

"குடிமகன்'களுக்கு தனி கவனிப்பு: குடிமகன்களை கவனிப்பதற்கு, பண பட்டுவாடாக் குழுவிலேயே, தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, அந்தந்தப் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில், மொத்தமாக அல்லது தினமும் ஒரு தொகையை அளித்து விடுகின்றனர். குழுவின் பிரதிநிதிகள் கூறும் நபர்களுக்கு உற்சாக பானத்தை டாஸ்மாக் கடைகள் வழங்குகின்றன. நொறுக்குத் தீனிகளை, டாஸ்மாக் கடைகளில் உள்ள பார்கள் கொடுக்கின்றன. டாஸ்மாக் கடைகளில், பணத்தை மொத்தமாகக் கொடுப்பதாலோ அல்லது தினந்தோறும் செட்டில் செய்வதாலோ, அதிகாரிகள் திடீரென ஆய்வு செய்யும் போது, டாஸ்மாக் கடைகளில், பண இருப்பில் சிக்கல் ஏற்படுகிறது. அதனால், பட்டுவாடா குழுவின் பிரதிநிதி, டாஸ்மாக் கடையை அவ்வப்போது, தொடர்பு கொண்டு பணத்தை செட்டில் செய்கிறார்.

9ம் தேதி இலக்கு: ஓட்டுப் பதிவுக்கு நான்கு நாட்களுக்கு முன்பே, பணப் பட்டுவாடாவை முடித்துக் கொள்ள வேண்டும் என, இலக்கு நிர்ணயித்து குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. பிற கட்சிகள், வாக்காளர்களை நெருங்கும் முன், அவர்களை தங்களுக்கு ஆதரவாக்கிக் கொள்ள வேண்டும் என்று இந்தத் தேதி நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகக் கூறுகின்றனர். மேலும், கொடுத்த பணம் போதாது என்று பிரச்னை எழும்போது அதை சமரசம் செய்யவும், கூடுதலாக பணம் கொடுக்கவும், போதிய அவகாசம் வேண்டும் என்பதற்காகவும், ஏப்ரல் 9ம் தேதி இலக்காகக் குறிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கின்றனர். ஓட்டுப் பதிவுக்கு முந்தைய சில தினங்கள், தேர்தல் கமிஷனின் கெடுபிடி தீவிரமாக இருக்கும் என்பதும், ஏப்ரல் 9ம் தேதியை இலக்காக கொண்டதற்கு காரணமாகக் கூறுகின்றனர். 
source: http://election.dinamalar.com/election_news_detail.php?id=1473

நடிகர் விஜய் மக்கள் இயக்கம் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக பிரச்சாரம்

23:55 Edit This 0 Comments »

திருச்சி: தமிழக சட்டசபைத் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக திருச்சி சங்கம் ஹோட்டலில் தங்கியுள்ள அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை, நடிகர் விஜயின் தந்தையும், திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் சந்தித்து பேசினார்.

20 நிமிடம் நடந்த சந்திப்புக்கு பின் இயக்குனர் சந்திரசேகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: வரும் சட்டசபைத் தேர்தலில் நடிகர் விஜய் மக்கள் இயக்க நிலைப்பாடு என்ன? என்று மக்கள் மத்தியிலும், இயக்கத்தினர் மத்தியிலும் கேள்வி நிலவி வருகிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே ஒரு முடிவு எடுத்துள்ளோம். தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மக்கள் இயக்கத்தில் உள்ளனர். ஆனாலும், வரும் சட்டசபைத் தேர்தலில் மக்கள் இயக்கம் அ.தி.மு.க.,வை ஆதரிக்கிறது. அந்த கட்சி ஆட்சிக்கு வர முனைப்பாக இறங்கி மக்கள் இயக்கத்தினர் வேலை செய்வார்கள். இயக்கத்தில், 20 முதல், 30 வயது உடைய இளம் ரத்தங்களே உள்ளனர். நாட்டில் அவ்வப்போது அரசியல் மாற்றம் வரவேண்டும் என்ற காரணத்துக்காகத்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அடிக்கடி அரசியல் மாற்றங்கள் ஏற்படுவது தான் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லது. அதுவும் சமீபகால அரசியலுக்கு மாற்றம் அவசியம் தேவை. அ.தி.மு.க., ஆட்சிக்கு வரவேண்டும். ஜெ., முதல்வராக வேண்டும். அதற்கு மக்கள் இயக்கத்தின் உழைப்பு முனைப்புடன் இருக்கும்.

நடிகர் விஜய் நேரடியாக பிரச்சாரம் செய்வது பற்றி இப்போது கூறமுடியாது. ஆனால், அவரின் ஆதரவு அ.தி.மு.க.,வுக்கு உண்டு. மக்கள் இயக்கத்தில், 50 பேரை உறுப்பினராக கொண்ட, 47 ஆயிரம் பதிவு பெற்ற மன்றங்கள் உள்ளன. சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க., ஆதரிப்பது அரசியலுக்கு வருவதற்காக இல்லை. அரசியலுக்கு வர நாங்கள் அவசரப்படவும் இல்லை. தனிப்பட்ட முறையில் ஏற்படும் பாதிப்புகளை நானும், நடிகர் விஜய்யும் சந்தித்துக் கொள்வோம். அதற்காக இயக்கம் ஆதரவு கொடுக்கவில்லை. இதில், சுயநலமும் இல்லை. சமீபகாலமாக நாட்டில் நடக்கும் வன்முறை, விலைவாசி உயர்வு, ஊழல் ஆகியவை காரணமாக பொதுநல நோக்கில் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். நாட்டின் மிகப்பெரிய ஊழலாக பேசப்பட்ட போபர்ஸ் ஊழலை விட, ஸ்பெக்டரமில் பல லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது. நாடு வளர்ச்சி அடைந்துள்ளதோ இல்லையோ, ஊழல் வளர்ச்சி அடைந்துள்ளது. நாட்டின் நிலையைப் பார்த்து ஒரு தமிழனாக, ஒரு இந்தியனாக இந்த முடிவுக்கு வந்துள்ளோம்.

மக்கள் இயக்கத்தின் சார்பில் நான் பிரச்சாரம் செய்ய வாய்ப்புள்ளது. நான் அரசியல்வாதியும் அல்ல. மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமும் அல்ல. மக்களுக்காக குரல் கொடுக்கும் சமூக இயக்கம். ஈழத்தமிழருக்காக உண்ணாவிரதம் இருந்துள்ளோம். தமிழக மீனவர்கள் சுட்டுக் கொள்ளப்பட்டதை கண்டித்து நாகையில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தினோம். நான் முதல்வராக கருணாநிதியிடமும், ஜெயலலிதாவிடமும் பலமுறை நலநிதி வழங்கியுள்ளேன். இதுவரை எந்த கட்சியிலும் நான் உறுப்பினர் இல்லை. நான் ஒரு தமிழன். எனக்கு திரைப்படம் மூலம் கலைஞரைத் தெரியும். தி.மு.க.,வைத் தெரியாது. நாட்டில் உள்ள பிரச்னைகளை மையப்படுத்தி பிரச்சாரம் மேற்கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
 source: http://election.dinamalar.com/election_news_detail.php?id=1462

மணற் கொள்ளையில் ஈடுபெடும் பெரும் புள்ளிகளை சிறையில் தள்ளுவேன்-ஜெயலலிதா

18:16 Edit This 0 Comments »


கரூர்: திமுகவின் கொடுங்கோல் ஆட்சியிலிருந்து தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் சுதந்திரம் பெற்றுத் தருவோம். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் மணற் கொள்ளையில் ஈடுபடும் பெரும் பெரும் புள்ளிகளை சிறையில் தள்ளுவேன் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.


கரூரில் இன்று பிற்பகல் ஜெயலலிதா பிரசாரம் மேற்கொண்டு பேசினார். அவரது பேச்சிலிருந்து சில பகுதிகள்:

*இது மாற்றத்திற்கான தேர்தல் மட்டுமல்ல. மக்களுக்கு விடுதலை பெற்றுத் தரும் தேர்தல். அடிமைத்தளையிலிருந்து மக்களை விடுவிக்க நடத்தப்படும் தேர்தல் .

*திமுக ஆட்சியின் கீழ் கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்கள் பல பிரச்சினைகளில் சிக்கித் தவித்து வருகின்றனர். அதில் மக்களை வெகுவாக பாதித்தது விலைவாசி பிரச்சினை. விலைவாசியைக் குறைக்க கருணாநிதி ஏதாவது நடவடிக்கை எடுத்தாரா என்றால் இல்லை. மாறாக விலைவாசி உயரத்தான் அவர் வழி வகுத்தார்.


*அriசி கடத்தலை ஊக்குவித்தார், பதுக்கல்காரர்களுக்குப் பக்க பலமாக இருந்தார். டீசல் விலை உயரக் காரணமாக இருந்தார். மண்ணெண்ணெய் விலை உயர்வுக்கு ஆதரவளித்தார். பெட்ரோல் விலைக்கு ஆதரவாக இருந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளில் 9 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு, 15 ரூபாய் அதிகரித்துள்ளது. 

*கிலோ 15 ரூபாய்க்கு விற்ற அரிசி இன்று 42 ரூபாய். 13 ரூபாய் சர்க்கரை 35 ரூபாய், 25 ரூபாய் துவரம் பருப்பு 90 ரூபாய், 35 ரூபாய் புளி 110 ரூபாய்க்கு விற்கிறது.

*மணற் கொள்ளை மூலம் ரூ. 50,000 கோடி, கிரானைட் கற்கள் கொள்ளை மூலம் ரூ. 80,000 கோடி என கருணாநிதி குடும்பத்தினர் கொள்ளையடித்துள்ளனர். 2005க்கு விற்ற ஒரு லோடு மணல் இன்று ரூ. 13,000 ஆக விற்கிறது. 150க்கு விற்ற ஒரு மூடை சிமென்ட் இன்று ரூ. 280க்கு விற்கிறது. 3 ரூபாய்க்கு விற்ற செங்கலின் விலை 6 ரூபாய். இனி கனவில்தான் வீடு கட்ட முடியும்.

*அடுத்த முக்கியப் பிரச்சினை மின்வெட்டு. கருணாநிதி ஆட்சிக்கு வந்த பின்னர் மின் உற்பத்தி பெருகவில்லை, மாறாக மின்வெட்டுதான் பெருகி விட்டது. மின் மிகை மாநிலமாக இருந்த தமிழகம் கருணாநிதி ஆட்சிக்கு வந்த பின்னர் மின்வெட்டு மாநிலமாக மாறியுள்ளது. தொழில் உற்பத்தி குறைந்து, விவசாய விளைச்சல் வீழ்ச்சியடைந்து, ஜவுளித் தொழில் நசிந்து பொருளாதாரம் நலிவடைந்து விட்டது. சட்டம் ஒழுங்கு இல்லாமலேயே போய் விட்டது.

*தமிழகத்தில் நடைபெறுவது ஆட்சியே இல்லை. ஒரு ரவுடிக் கும்பல் தமிழக மக்களை அடக்கி ஆள்கிறது. காவல்துறை கருணநிதியின் ஏவல் துறையாகி விட்டது. உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல். நிலவுகிறது. எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்பதே கருணாநிதியின் தராக மந்திரம்.

*1 லட்சம் கோடிக்கு மேல் தமிழக அரசின் கடன் உள்ளது. ஆனால் ஸ்பெக்ட்ரம் ஊழலில் மட்டும் 1.80 லட்சம் கோடி ரூபாயை சம்பாதித்துள்ளனர் கருணாநிதி குடும்பத்தினர்.

*கருணாநிதி குடும்ப டிவிகள் அனைததும் இந்த ஊழல் பணத்திலிருந்துதான் ஆரம்பிக்கப்பட்டன. இந்தப் பணம் அரசுக்கு்க கிடைத்திருந்தால் நாடு வளம் பெற்றிருக்கும். ஆனால் தற்போது வளம் பெற்றிருப்பது கருணாநிதி குடும்பம் மட்டும்தான். மக்கள் பணத்தை சுருட்டி தன் மக்களை கோடீஸ்வரர்களாக்கிய ஒரே முதல்வர் கருணாநிதி மட்டுமே.

*லஞ்ச ஊழல் ஆட்சியால் நாட்டின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. காலாவதி மருந்து, கள்ள லாட்டரிச் சீட்டு விற்பனை என்று பல வழிகளிலும் கருணாநிதி குடும்பத்திற்கு பணம் சென்று கொண்டேதான் உள்ளது.

*அரசுத் திட்டங்களில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கருணாநிதிக்கு அடியோடு இல்லை. மத்திய அரசில் அங்கும் வகித்தும் மக்கள் பிரச்சினகைளைத் தீர்க்க கருணாநிதிக்கு முடியவில்லை. காவிரி இறுதி தீர்ப்பை கெஜட்டில் வெளியக் கூடச் செய்ய முடியவில்லை அவரால்.

*முல்லைப் பெரியாறு வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்த முடியவில்லை. பாலாற்றில் அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த கருணாநிதியால் முடியவில்லை.

*அரசு ஊழியர்களின் சம்பளத்தைக் குறைத்த ஒரே அரசு கருணாநிதி அரசுதான். ரியல் எஸ்டேட் வேலையைத்தான் கருணாநிதி குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.

*கரூரில் நடைபெறும் மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். பெரிய புள்ளிகள் கம்பி எண்ணுவார்கள். நூல் விலை உயர்வைக் குறைத்து ஜவுளி ஏற்றுமதியை ஊக்குவிக்கவும், சாயக் கழிவு பிரச்சினைக்கு நீரந்தரத் தீர்வு காணவும், புதிய காவிரி குடிநீர்த் திட்டம் அமையவும், பழைய அமராவதி பாலத்தையொட்டி புதிய பாலம் அமைக்கவும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க புறவழி இணைப்புச் சாலை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

*ஒரு ஓட்டுக்கு ரூ. 1 லட்சம் வரை கூட கொடுக்கக் கூடிய அளவில்திமுகவினர் உள்ளனர். அவர்கள் பணத்தோடு வருவார்கள். அதைப் பெற்றுக் கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். அது உங்கள் பணம்தான். அதை வாங்கிக் கொண்டு, மனசாட்சி சொல்வது போல செய்யுங்கள் என்றார் ஜெயலலிதா.

"கருணாநிதியால் ஓட்டுக்கு ரூ.1 லட்சம் தரமுடியும்': ஜெ., "திடுக்'

18:00 Edit This 0 Comments »

திருச்சி: திருச்சியில் மூன்று நாள் சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள ஜெயலலிதா மூன்றாம் நாளான நேற்று இலவச அஸ்திரத்தை கையிலெடுத்தார். ""ஓட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் கருணாநிதியால் தரமுடியும்; அதை வாங்கிக் கொண்டு மனசாட்சிப்படி ஓட்டளியுங்கள்,'' என்று ஜெயலலிதா பேசினார்.

அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா, ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட திருச்சி பழைய கலெக்டர் அலுவலகத்துக்கு மாற்றப்பட்ட ஸ்ரீரங்கம் நில சீர்திருத்தம் உதவி கமிஷனர் அலுவலகத்தில் கடந்த 24ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்தார். ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் பகுதியில் தன் முதல் நாள் பிரச்சாரத்தை துவக்கிய ஜெயலலிதா, இரண்டு நாட்களாக 70 கி.மீ., தூரம் பயணம் செய்தார். மூன்றாம் நாளான நேற்று திருச்சி புத்தூர் நால்ரோட்டில் பிரச்சாரத்தைத் துவக்கினார். தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள, 24 இலவசங்கள் பற்றி கடந்த இரண்டு நாள் பிரச்சாரத்தில் குறிப்பிடவில்லை. மூன்றாம் நாள் பிரச்சாரமான நேற்று ஜெயலலிதா, இலவச அஸ்திரத்தை கையிலெடுத்து பேசினார். இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. நேற்று முன்தினத்தை விட நேற்று ஏராளமான தொண்டர்கள், மக்கள் ஜெயலலிதாவை காண கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது நீண்ட நேரம் காத்திருந்தனர். மாலை 5 மணிக்கு சங்கம் ஹோட்டலிலிருந்து புறப்பட்ட ஜெயலலிதா புத்தூர் நால்ரோட்டில் தன் பிரச்சாரத்தை துவக்கினார்.

திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளர் மரியம்பிச்சைக்கு ஓட்டு கேட்டு, ஜெயலலிதா பேசியதாவது: கடந்த ஐந்தாண்டு ஆட்சியில் மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை மூலம் கருணாநிதி குடும்பம் கோடிகளை குவித்துள்ளது. கருணாநிதி, மக்கள் பணத்தைச் சுரண்டி தன் மக்களை கோடீஸ்வரர்களாக்கியுள்ளார். திரைப்படத்துறையில் கருணாநிதியின் குடும்ப ஆதிக்கம் அதிகரித்துள்ளது. தமிழகத்தை ரவுடிக்கும்பல் தான் ஆட்சி செய்கிறது. இந்நிலை தொடர வேண்டுமா? திருச்சி மேற்குத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க., அமைச்சர் நேருவுக்கு தெரியாமல் மாவட்டத்தில் எந்த நிலமும் விற்கப்படுவதில்லை. "தில்லைநகர் நேருநகர்' ஆகிவிட்டது. நேரு மீண்டும் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமா? மின்மிகு மாநிலமாக இருந்த தமிழகம் "மின்வெட்டு' மாநிலமாக மாறிவிட்டது. சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுக் கிடக்கிறது. காவல் துறை, கருணாநிதியின் ஏவல் துறையாக மாறிவிட்டது. இந்நிலை மாற வேண்டும். ஓட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் தரக்கூடிய அளவுக்கு கருணாநிதியிடம் பணம் உள்ளது. தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுப்பர். அதை வாங்கிக் கொள்ளுங்கள்; மனசாட்சிப்படி ஓட்டளியுங்கள். இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

திருச்சி கிழக்குத் தொகுதி வேட்பாளர் மனோகரனுக்கு ஓட்டுகேட்டு சத்திரம் பஸ் ஸ்டாண்டில், இலவச அஸ்திரத்தை கையிலெடுத்து ஜெயலலிதா பேசியதாவது: ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்ற நிலை மாற்றப்பட்டு, அனைத்து ரேஷன் கார்டுதாரருக்கும், 20 கிலோ அரசி இலவசமாக வழங்கப்படும். மணப்பெண் தாலிக்கு, 4 கிராம் தங்கம் இலவசமாக வழங்கப்படும். தாய்மார்களுக்கு இலவசமாக மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் வழங்கப்படும். முதியோர், ஊனமுற்றோர், ஆதரவற்றோர் உதவித் தொகை, 500 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக உயர்த்தப்படும். அரசு சார்பில் விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசனம் செய்து தரப்படும். கரும்பு கொள்முதல் விலை, 2,500 ரூபாயாக உயர்த்தப்படும். அரசு, தனியார் பள்ளியில் ப்ளஸ் 1, ப்ளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியருக்கு இலவச லேப்-டாப் கம்ப்யூட்டர் வழங்கப்படும். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 10 லட்சம் ரூபாய் கடனுதவியும், அதில் 25 சதவீதம் மானியம் வழங்கப்படும். 58 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படும். மூன்று லட்சம் ஏழைகளுக்கு 1.80 லட்சம் ரூபாய் மதிப்பில் 300 சதுரஅடியில் பசுமை வீடுகள் கட்டித்தரப்படும். வீடில்லாதவர்களுக்கு 3 சென்ட் நிலம் தரப்படும். வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு, 4 ஆடுகள் இலவசமாக வழங்கப்படும். பால் உற்பத்தியை பெருக்கும் வகையில், 6,000 கிராமங்களில் 60 ஆயிரம் கவைமாடுகள் வழங்கப்படும். இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

"ஸ்பெக்டரம்' ஆம்னிவேன்': முதல்வர் கருணாநிதி குடும்பத்தை மட்டுமல்ல உலகம் முழுவதும் உலுக்கியெடுத்த "ஸ்பெக்டரம்' குறித்து அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா தொடர்ந்து ஒவ்வொரு மேடைகளிலும் கடுமையாக விமர்சித்து வருகிறார். நேற்று அவர் பிரச்சாரம் செய்த திருச்சி, சத்திரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் "ஸ்பெக்டரம்' ஊழலை விளக்கும் வகையில் ஆம்னிவேன் நிறுத்தப்பட்டிருந்தது. அதில், தொலைத்தொடர்பு சாதனங்கள் அலங்கரிக்கப்பட்டு, "ஸ்பெக்டரம்' ஊழல் தொகையான ரூ.1,76,000 லட்சம் கோடி என எழுதப்பட்டிருந்தது. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வேனுக்கு முன் நின்று அனைவரும் "ஃபோட்டோ' எடுத்துக் கொண்டனர்.

அண்ணா மீதுள்ள பற்றால் அதிமுகவுடன் கூட்டணி வைத்தேன்! - விஜயகாந்த்

18:50 Edit This 0 Comments »
சென்னை: அண்ணா மீதுள்ள பற்றால்தான் நான் அண்ணா திமுகவுடன் கூட்டணி வைத்தேன் என்றார் விஜயகாந்த்.


மாதவரம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் மாதவரம் மூர்த்தி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் செங்குன்றம் பஸ் நிலையம் அருகில் பிரசாரம் செய்தார். அவர் பேசுகையில், "கடந்த 5 ஆண்டுகளாக நடந்த ஆட்சியில் அத்தியாவசிய பொருட்கள் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது.

பெட்ரோல், டீசல் விலையும் பல முறை உயர்த்தப்பட்டது. இதனால் நீங்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளதை உணர்ந்துள்ளேன். மக்களின் வரிப் பணம், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு இழப்பீடு மூலம் ஊழலாகிவிட்டது. அந்த பணத்தை உங்களிடம் சேர்க்க நாங்கள் முயற்சி எடுப்போம்.

நான் சிறு வயது முதலே எம்.ஜி.ஆர். மீது பற்று உள்ளவன். அவர் ஒவ்வொரு படத்திலும் எந்தெந்த மாதிரி உடை உடுத்தி நடித்தார் என்பது கூட எனக்குத் தெரியும்.

அ.தி.மு.க.வுடன் விஜயகாந்த் ஏன் கூட்டு சேர்ந்தார் என்று நீங்கள் நினைத்து இருக்கலாம். பேரறிஞர் அண்ணா மீது கொண்டுள்ள பற்றுதல் காரணமாக அண்ணா பெயர் கொண்ட அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளேன்.

தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகளை சிலர் விமர்சிக்கிறார்கள். தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகள் நல்லதுதானே. இதன் மூலம் பணம் கொடுத்து ஓட்டுக்களை விலைக்கு வாங்கி விடலாம் என்று சிலரது கனவு தகர்க்கப்பட்டுள்ளது.

தி.மு.க. ஆட்சியை அகற்றுவதே என் லட்சியம்.

எகிப்து, லிபியா நாடுகளில் புரட்சி வெடித்தது போல தமிழக தேர்தலிலும் புரட்சி வெடிக்கும். உங்களுக்கு சிலர் பணம் கொடுக்க வருவார்கள். தயவு செய்து அந்த பணத்தை வாங்காதீர்கள். உங்கள் ஜனநாயக கடமையை சரியாக செய்யுங்கள்...", என்றார்.

அ.தி.மு.க.,வுக்கு சிறப்பான வரவேற்பு: ஜெயலலிதா

23:39 Edit This 0 Comments »
திருச்சி: இலவசங்கள் மூலம் மட்டுமே மக்களை கவரும் நிலையில் அ.தி.மு.க., இல்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். மக்களிடையே அ.தி.மு.க.,விற்கு சிறப்பான வரவேற்பு உள்ளது. எனவே இலவசங்கள் மூலம் மட்டுமே அ.தி.மு.க., வாக்காளர்களை கவர நினைப்பதாக கூறுவது தவறானது என்று தெரிவித்துள்ளார். 
திருச்சி: அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு உயர்த்தப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளர் மரியம் பிச்சையை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், தி.மு.க., அரசு முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியிருந்தாலும் அது முறையாக செயல்படுத்தப்படவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு உயர்த்துவதோடு மட்டுமல்லாமல், அது முறையாக கண்காணிக்கப்படும் என்றும் தெரிவித்தார். 2ம் நாள் பிரசாரத்தை இன்று மாலை 5 மணிக்கு துவக்கிய ஜெயலலிதா, கருமண்டபம், தீரன் நகர், ராம்ஜி நகர் டோல்கேட், புங்கனூர் வழியாக மரவனூர் வரை பிரசாரம் செய்கிறார். 

அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை (2011): தாலிக்கு அரை பவுன், இலவச லேப்டாப், விசிறி, மிக்சி, கிரைண்டர்

22:01 Edit This 0 Comments »

அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் பெண்களின் தாலிக்கு அரைபவுன் தங்கம், குடும்ப பெண்களுக்கு ஃபேன், மிக்ஸி, கிரைண்டர் என ஏராளமான இலவசங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க., தேர்தல் அறிக்கைவிபரம் வருமாறு;
* குடும்ப ரேஷன் கார்டுகளுக்கு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தொடரும் என்ற நிலையை மாற்றி, பயனாளிகள் அனைவரும் பயன்பெறும் வகையில் மாதம் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும்.

*நுண்ணிய வேளாண்மை திட்டத்தை செம்மைப்படுத்தி, அதன்மூலம் விவசாயிகளை பங்குதாரர்களாக கொண்ட விவசாய நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு, சொட்டு நீர்ப்பாசன வசதி அரசு செலவில் அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாக வழங்கப்படும்.

* வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் 20லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தூய்மையான குடிநீர் இலவசமாக வழங்கப்படும். இதன்மூலம் 5.6 லட்சம் பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.

* வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள மூன்று லட்சம் மக்களுக்கு 300 சதுர அடியில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் இலவசமாக நவீன பசுமை வீடுகள் கட்டித்தரப்படும். மேலும் 40 லட்சம் நடுத்தர வகுப்பு மக்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் மான்யத்துடன் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.

* வீடில்லா ஏழை குடும்பங்களுக்கு வீடுகட்ட 3 சென்ட் இடம் அளிக்கப்படும்.

* வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்கள் வீடுகளுக்கு சூரிய ஒளிமூலம் தடையில்லா மின்சார வசதி இலவசமாக வழங்கப்படும்.

* பால் உற்பத்தியை தினமும் 2.5 மில்லியன் லிட்டரிலிருந்து 10 மில்லியன் லிட்டராக பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும். அந்த வகையில் தமிழகத்திலுள்ள 6,000ம் கிராமங்களில் 60 ஆயிரம் கறவை மாடுகள் இலவசமாக வழங்க வழிவகை செய்யப்படும்.

* வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள அடித்தட்டு மக்களுக்கு நான்கு ஆடு இலவசமாக வழங்கப்படும்.

* அனைவருக்கும் தரமான, இலவச கல்வி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

* பள்ளி மாணவர்களுக்கு 4 சீருடை, காலணிகள் இலவசமாக வழங்கப்படும்.

* அரசு மற்றும் தனியார் பள்ளியில் படிக்கும் ப்ளஸ் 1, ப்ளஸ் 2 மாணவ, மாணவியர்களுக்கு லேப்டாப் கம்ப்யூட்டர் இலவசமாக வழங்கப்படும்.

* அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் (கலை அறிவியல் மற்றும் பொறியியல்) மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக லேப்டாப் கம்ப்யூட்டர் வழங்கப்படும்.

* பெண்களுக்கு ஒரு ஃபேன், ஒரு மிக்ஸி, ஒரு கிரைண்டர் ஆகிய மூன்று பொருட்களும் இலவசமாக வழங்கப்படும்.

* இலவச திட்டங்கள் அனைத்தும் இலங்கை தமிழர்கள் முகாம்களுக்கும் நீடிக்கப்படும்.

* 58 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் உள்ளூர், பக்கத்து நகரங்கள், கிராமங்களுக்கு அரசு பஸ்களில் சென்று வர இலவச பஸ்பாஸ் வழங்கப்படும்.

* ஒவ்வொரு யூனியன் பகுதிகளிலும் முதியோர், ஆதரவற்ற முதியோர், குழந்தைகள் தங்க சிறப்பு தங்கும் விடுதிகள் அமைக்கப்படும். அங்கு தங்குவோருக்கு இலவசமாக உணவு வழங்கப்படும். மேலும் அங்கு புத்தக நிலையம், தியான மண்டபம் ஆகியவை ஏற்படுத்தப்படும்.

* பெண்களுக்கு திருமண உதவித்தொகையாக தற்போது வழங்கப்பட்டு வரும், 25 ஆயிரம் ரூபாயுடன், தங்கத்தின் விலை உயர்வை கருத்தில் கொண்டு, நான்கு கிராம் தங்கம் (அரை பவுன்) மணப்பெண்ணின் திருமாங்கல்யம் (தாலி) செய்ய இலவசமாக வழங்கப்படும். இளநிலை மற்றும் டிப்ளமோ படித்த பெண்களுக்கு திருமண உதவித்தொகை, 50 ஆயிரம் ரூபாயும், நான்கு கிராம் தங்கமும் வழங்கப்படும்.

திருப்பூரில் ஜெ., 19ல் பிரசாரம் : அ.தி.மு.க., தீவிர ஏற்பாடு

22:31 Edit This 0 Comments »
அவிநாசி : திருப்பூரில் வரும், 19ம் தேதி, ஜெ., பிரசாரம் செய்ய முதற்கட்ட சுற்றுப் பயணம் தயாரிக்கப்பட்டுள்ளது; ஜெ., பேசும் இடங்கள் குறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். அ.தி.மு.க., கூட்டணியில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. வேட்பாளர் பட்டியலை அறிவித்ததும், தேர்தல் பிரசாரத்தை துவக்க ஜெ., திட்டமிட்டுள்ளார். இதற்காக, முதற்கட்ட சுற்றுப் பயண திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
வரும், 19ல், திருப்பூரில் பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெ., வருகையை முன்னிட்டு திருப்பூர் அருகே பாண்டியன் நகரில், "ஹெலிபேட்' அமைக்க இடம் தேர்வு செய்யப்பட உள்ளது. ஹெலிகாப்டர் மூலம் திருப்பூருக்கு வரும், ஜெ., அவிநாசி தொகுதிக்கு உட்பட்ட திருமுருகன்பூண்டி, திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்கிறார். பிரசாரத்துக்கு தயாரிக்கப்பட்ட பிரத்யேக வேனில் இருந்தவாறே பேசும் ஜெ., தொடர்ந்து கோவை மாவட்டத்தில் பிரசாரம் செய்ய உள்ளார். source  DINAMALAR 
http://election.dinamalar.com/election_news_detail.php?id=146

VIJAY IN AIADMK

20:32 Edit This 0 Comments »
Ilayathalapathy Vijay is plunging into politics. 
 Kollywood circles are abuzz as Ilayathalapathy Vijay is plunging into politics.

Sources close to AIADMK has confirmed that Vijay who is now in Dehradoon shooting for Nanban will meet Jayalalitaa long with his father SA Chandrasekhar shortly.
A leading newspaper has quoted a senior AIADMK leader as saying: " Vijay's party Vijay Makkal Iyakkam (VMI) is likely to get three seats in our front. Vijay doesn't want to contest but his father SA Chandrasekhar wishes to contest from Pudukottai. Both Vijay and SAC will campaign for our party."  SOURCE http://www.sify.com/movies/aiadmk-to-give-vijay-3-seats-news-tamil-ldinBTaeicd.html

20:16 Edit This 0 Comments »

ஜெ., பிரசாரத்துக்காக திருச்சியில் ஆயத்தப்பணிகள் சுறுசுறு


மார்ச் 22,2011 
 
திருச்சி : அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா அக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வருகிற 24ம் தேதி முதல் பிரசாரம் செய்கிறார். 24,25,26 ‌தேதிகளில் திருச்சியில் பிரசாரம் செய்கிறார். 3 நாள் அவர் திருச்சி சங்கம் ஓட்டலில் தங்குகிறார். அதற்காக சங்கம் ஓட்டலில் ஆயத்தப் பணிகள் விறுவிறுவென நடந்து வருகிறது. பிரசாரத்துக்கு பயன்படும் 2 அதிநவீன வாகனங்கள் உள்பட 5 வாகனங்களும். வேட்பாளருக்கான ஜீப் ஒன்றும் திருச்சி வந்துள்ளது. மேலும் 2 மினி கண்டெய்னர்களில் ஜெயயலிதாவுக்க தேவையான பொருட்களும் கொண்டு வரப்பட்டுள்ளன. சங்கம் ஓட்டலில் ஜெ., தங்கயிருக்கும் அறையும் நவீனப்படுத்தப்பட்டு வருகிறது.

The revelution starts.

17:50 Edit This 0 Comments »
ADMK chief Jayalalitha to file nomination for Srirangam seat tomorrow in Trichy. She will file her papers between 10 am to 1 pm. After nomination filing Jaya will lauch her election campaign. She will wind up her campaign in Chennai on April 11. source one india  http://thatstamil.oneindia.in/news/2011/03/23/jayalalitha-file-nomination-trichy-aid0091.html

AIADMKSMS

21:52 Edit This 3 Comments »
Join the sms network of AIADMK by smsing 
ON AIADMKSMS to 9870807070

MGR

MGR songs...