திருப்பூரில் ஜெ., 19ல் பிரசாரம் : அ.தி.மு.க., தீவிர ஏற்பாடு

22:31 Edit This 0 Comments »
அவிநாசி : திருப்பூரில் வரும், 19ம் தேதி, ஜெ., பிரசாரம் செய்ய முதற்கட்ட சுற்றுப் பயணம் தயாரிக்கப்பட்டுள்ளது; ஜெ., பேசும் இடங்கள் குறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். அ.தி.மு.க., கூட்டணியில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. வேட்பாளர் பட்டியலை அறிவித்ததும், தேர்தல் பிரசாரத்தை துவக்க ஜெ., திட்டமிட்டுள்ளார். இதற்காக, முதற்கட்ட சுற்றுப் பயண திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
வரும், 19ல், திருப்பூரில் பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெ., வருகையை முன்னிட்டு திருப்பூர் அருகே பாண்டியன் நகரில், "ஹெலிபேட்' அமைக்க இடம் தேர்வு செய்யப்பட உள்ளது. ஹெலிகாப்டர் மூலம் திருப்பூருக்கு வரும், ஜெ., அவிநாசி தொகுதிக்கு உட்பட்ட திருமுருகன்பூண்டி, திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்கிறார். பிரசாரத்துக்கு தயாரிக்கப்பட்ட பிரத்யேக வேனில் இருந்தவாறே பேசும் ஜெ., தொடர்ந்து கோவை மாவட்டத்தில் பிரசாரம் செய்ய உள்ளார். source  DINAMALAR 
http://election.dinamalar.com/election_news_detail.php?id=146

0 comments:

MGR

MGR songs...