மெட்ரிக் பள்ளிகளுக்கு சமச்சீர்கல்வி புத்தகங்கள் திங்கள் முதல் வினியோகம்

21:35 Edit This 0 Comments »
மதுரை : மெட்ரிக் பள்ளிகளுக்கு 1 மற்றும் 6ம் வகுப்பு சமச்சீர் கல்வி புத்தகங்கள் திங்கள் முதல் வினியோகிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் சமச்சீர் கல்வியை 1 மற்றும் 6ம் வகுப்பு தொடர்ந்து நடத்தலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து அரசு, உதவிபெறும் பள்ளிகளுக்கு அப்புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. சர்ச்சைக்குரிய செம்மொழி மாநாடு முத்திரை உட்பட சில பகுதிகளை கிழித்தோ, ஸ்டிக்கரால் மறைத்தோ மாணவர்களுக்கு வழங்குகின்றனர். அதேசமயம் ஆங்கில வழி கல்வி நடக்கும் மெட்ரிக் பள்ளிகளுக்கு புத்தகம் வினியோகிக்க தடை செய்யப்பட்டது. அரசின் வாய்மொழி உத்தரவால் புத்தகம் வினியோகிக்கவில்லை. இந்நிலையில் அப்பள்ளிகளுக்கும் புத்தகம் வினியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி மெட்ரிக் பள்ளிகள் 1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு தேவையான புத்தக எண்ணிக்கையை தங்களுக்கு அருகில் உள்ள "நோடல் பாயின்ட்'டாக செயல்படும் மையங்களில் தெரிவித்து, மொத்த தொகையையும் டி.டி.,யாக வழங்க வேண்டும். 1ம் வகுப்புக்கு ரூ. 200, ஆறாம் வகுப்புக்கு ரூ. 250க்கு டி.டி., பெற்று வழங்கினால், வரும் திங்கள் முதல் புத்தகங்கள் வினியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கீகார பள்ளிகள் கணக்கெடுப்பு: இதற்கிடையே தனியார் பள்ளிகளில் பல அங்கீகாரம் இன்றி செயல்படுவதால் ஆண்டுதோறும் ஏதாவது பிரச்னை ஏற்பட்டுவிடுகிறது. பல பள்ளிகளில் மாணவர்கள் கடைசி நேரத்தில் தேர்வு எழுதச் செல்லும்போது பிரச்னை உருவாகிறது. இதனால் தேவையற்ற மனஉளைச்சல்கள் ஏற்படுகின்றன. இதைத் தவிர்க்க இப்போதே நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. இதுதொடர்பாக உளவுப் பிரிவு போலீசார் அங்கீகாரம் பெறாத பள்ளிகள் குறித்து விபரம் சேகரித்து வருகின்றனர். மாவட்ட கல்வி அலுவலர்கள், மெட்ரிக் ஆய்வாளர்கள், மாவட்ட துவக்கக் கல்வி அலுலகங்களுக்குச் சென்று பல்வேறு வகையான பள்ளிகள் குறித்து விபர சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக மீனவர்கள் விடுதலை

21:30 Edit This 0 Comments »
புதுச்சேரி: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 23 பேர் திங்கட்கிழமை விடுதலை செய்யப்படுவர் என மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் பணீ நீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்று கூறினார்.

மரியம் பிச்சை விபத்து வழக்கு-ஆந்திர லாரி டிரைவர் சிக்கினார்-தீவிர விசாரணை

23:10 Edit This 0 Comments »
சென்னை: தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மரியம் பிச்சை சாலை விபத்து வழக்கில், ஆந்திராவில் வைத்துப் பிடிபட்டுள்ள லாரி டிரைவர் ஷேக் ரகமதுல்லாவிடம் சிபிசிஐடி போலீஸார் சென்னையில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுற்றுச்சூழல் அமைச்சராக நியமிக்கப்பட்ட மரியம் பிச்சை, எம்.எல்.ஏ பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக திருச்சியிலிருந்து கார் மூலம் சென்னை புறப்பட்டார். வழியில் பாடாலூர் என்ற இடத்தில் அவரது கார் வந்தபோது கண்டெய்னர் லாரி ஒன்று அமைச்சரின் கார் மீது மோதியது. இதில் மரியம் பிச்சை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

வழக்கமாக இதுபோல விபத்துக்களில் சிக்கும் லாரிகளின் டிரைவர்கள், உடனடியாக லாரியை நிறுத்தி விட்டு தப்பி ஓடி விடுவார்கள் அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்திற்குப் போய் சரணடைவார்கள். ஆனால் இந்த விபத்தில் அப்படி எதுவும் நடக்கவில்லை. மாறாக சம்பந்தப்பட்ட லாரி டிரைவர் லாரியுடன் தப்பி விட்டார்.

இதனால் இது விபத்தா அல்லது சதிச் செயலா என்ற கேள்விகள் எழுந்தன. இதையடுத்து சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

சிபிசிஐடி போலீஸாரின் விசாரணையில் லாரியின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட லாரி ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்ததாகும். அந்த லாரியை அன்றைய தினம் ஓட்டி வந்தவர் விஜயவாடாவைச் சேர்ந்த ஷேக் ரகமதுல்லா ஆவார்.

அன்றைய தினம் தூத்துக்குடியில் ஜிப்சம் ஏற்றிக் கொண்டு வந்தபோது பாடாலூர் அருகே அமைச்சரின்கார் மீது மோதி விட்டார் ரகமதுல்லா. பின்னர் அவர் நேராக விஜயவாடா விரைந்தார். அங்கு தனது உரிமையாளரிடம் லாரியை ஒப்படைத்து நடந்ததைக் கூறினார்.

இதையடுத்து ரகமதுல்லாவை அவரது வீட்டில் போய் இருக்குமாறு கூறிய அவரது உரி்மையாளர், லாரியுடன் மேற்கு வங்கம் சென்று ஜிப்சத்தை இறக்கினார்.

இந்த நிலையில் போலீஸாருக்கு தகவல் கிடைத்து அவர்கள் ரகமதுல்லாவை பிடித்தனர். தற்போது அவரை சென்னைக்குக் கொண்டு வந்து விட்டனர். இங்குள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் வைத்து அவரிடம் கூடுதல் டிஜிபி அர்ச்சனா ராமசுந்தரம் மற்றும் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணைக்குப் பின்னர் விபத்து நடந்த இடத்திற்கு ரகமதுல்லாவை அழைத்துச் சென்று நேரில் விசாரணை நடத்தவும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் பிடிபட்டுள்ள லாரியும் தற்போது சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு வருகிறது. இதற்காக தனிப்படை போலீஸார் அங்கு விரைந்துள்ளனர்.

800 லாரிகள்

விபத்து நடைபெறுவதற்கு முன்பு வரை சம்பந்தப்பட்ட சாலையில் 800 லாரிகள் கடந்து சென்றதை போலீஸார், சோதனைச் சாவடி தகவல்கள் மூலம் தெரிந்து கொண்டனர்.

இதில், 127 லாரிகள் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவையாகும். கேரளாவைச் சேர்ந்தவை 4 மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த லாரிகள் 8 ஆகும்.

விபத்து நடந்த இடத்திற்கு முன்பு சமயபுரம் சோதனைச் சாவடியும், நடந்த இடத்தைத் தாண்டி திருமாந்துறை சோதனைச் சாவடியும் உள்ளன.

விபத்து நடந்த சமயத்தில் சமயபுரம் சோதனைச் சாவடியைத் தாண்டி எத்தனை வாகனங்கள் சென்றன என்பது குறித்து ஆராய்ந்தபோது இரண்டு ஆந்திர லாரிகள் போயிருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து விசாரணை நடத்தியபோதுதான் ரகமத்துல்லா சிக்கினார். அவரைப் பிடித்து விசாரித்தபோது அவர் உண்மையை ஒப்புக் கொண்டு விட்டார்.

அவர் மீது தற்போது விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடியது, தடயத்தை அழிக்க முயற்சித்தது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ராம்தேவின் ஊழலுக்கு எதிரான போராட்டம்.

11:51 Edit This 0 Comments »
டெல்லி: பாபா ராம்தேவின் ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டத்திற்காக டெல்லி ராம்லீலா மைதானத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

டெல்லியில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், கூட்டங்கள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும் இடம்தான் ராம்லீலா மைதானம். ராம்லீலா நிகழச்சியும் இந்த மைதானத்தில்தான் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இங்குதான் தற்போது ராம்தேவி்ன் உண்ணாவிரதம் தொடங்கியுள்ளது.

கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் சதுர அடி பரப்பளவில் பிரமாண்ட பந்தல் போட்டு உண்ணாவிரதம் தொடங்கியுள்ளது. பந்தல் அலங்காரம் கண்களைப் பறிப்பதாக உள்ளது. வெயிலின் கொடுமையிலிருந்து தப்புவதற்காக பந்தலுக்கு உள்ளே கிட்டத்தட்ட5000 மின்விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளன. மேடையில் ஏர்கூலர்களும் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும் குடிநீருக்கு மக்கள் திண்டாடி விடக் கூடாது என்பதற்காக போர்வெல் போட்டு 650 குழாய்களையும் நிர்மானித்துள்ளனர்.



மேலும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வருவோரின் வசதிக்காக குளியல் அறைகள், கழிப்பறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 1000க்கும் மேற்பட் பாத்ரூம், டாய்லெட்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பெருமளவிலானோர் பல்வேறு இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் மூட்டை முடிச்சுகளுடன் நேற்றே ராம்லீலா மைதானத்தில் வந்து குவிந்து விட்டனர்.

உண்ணாவிரதம் இருப்போரின் உடல் நிலையைக் கண்காணிப்பதற்காக டாக்டர்கள் குழுவையும் ஏற்பாடு செய்துள்ளனர். கிட்டத்தட்ட 60 டாக்டர்கள் இந்தப் பணியில் ஈடுபடவுள்ளனர்.

போராட்டத்தில் குழுப்பம் வந்து விடாமல் தடுப்பதற்காக கண்காணிப்பு கேமராக்களையும் உண்ணாவிரதப் பந்தல் பகுதியில் பொருத்தியுள்ளனர்.
போராட்டத்தில் சமூ்க விரோதிகள் புகுந்து குழப்பம் விளைவித்து விடாமல் தடுப்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. மேலும் பாபாவின் ஆதரவாளர்களும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

தோடு அணிவதற்கு காரணம்

11:19 Edit This 0 Comments »


சென்னை: நீண்ட காலத்திற்குப் பின்னர் தான் காதில் சிறிய தோடு அணிவதற்கு காரணம் என்ன என்பதை முதல்வர் ஜெயலலிதா விளக்கினார்.
தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு புதன்கிழமை பேட்டி அளிக்கும்போது அது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.கடந்த காலங்களில் ஒரு ஆபணரமும் அணியாமல் இருந்தீர்கள்.இப்போது காதில் மட்டும் சிறிய தோடு அணிந்துள்ளீர்களே என்ன காரணம்?எனக் கேட்டனர்.

இதற்கு ஜெயலலிதா அளித்த பதில் 1997 ஆம் ஆண்டுக்குப் பிறகு நான் எந்தவிதமான நகையையும் ஆபரணங்களையும் அணியவில்லை.இந்த முடிவு எனது கட்சியினருக்குப் பிடிக்கவில்லை.கடந்த பல ஆண்டு காலமாக எனது கட்சியினர் பல்வேறு சந்தர்ப்பங்களில் என்னைச் சந்திக்கும் போதெல்லாம் உங்களை இப்படிப் பார்ப்பதற்கு (நகைகள் அணியாமல்) எங்களுக்கு கஷ்டமாக இருக்கிறது.எனவே உங்களது முடிவை மாற்றிக் கொள்ளவேண்டும்.ஏதாவது நகை அணியவேண்டும்.யாரோ உங்களைப் பற்றி ஏதோ சொன்னார் என்பதற்காக நீங்கள் ஏன் இப்படி இருக்கவேண்டும்?உங்களை பழித்துப்பேசிய தி.மு.க.வினர் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.எனவே அவர்கள் ஏதோ சொன்னார்கள் என்பதற்காக நீங்கள் ஏன் இப்படி இருக்க வேண்டுமென்று அவ்வப்போது என்னை வற்புறுத்தி வந்தார்கள். ஆனாலும் இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.

தேர்தலில் வெற்றிபெற்றுவிட்டோம் என்ற அறிவிப்பு வந்ததும் அ.தி.மு.க.பெரிய பெரும்பான்மையோடு வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப்போகிறது என்ற செய்தி வந்ததும் பலர் அன்று வீட்டில் கூடிவிட்டார்கள் அப்போது கட்சியினர் என்னைப் பார்த்து நீங்கள் இப்போதாவது எங்களுக்காக உங்கள் முடிவை மாற்றிக்கொள்ளவேண்டுமென்றும் இப்போதாவது நீங்கள் ஆபரணம் அணியவில்லையென்றால் மண்ணெண்ணெய் ஊற்றி இங்கேயே தீக்குளிப்போம் என்றும் தெரிவித்தனர்.
எங்களுடைய கட்சியினர் சொன்னால் செய்து விடுவார்கள்.பல்வேறு காரணங்களுக்காக பல்வேறு சந்தர்ப்பங்களில் கட்சியினர் பலர் தீக்குளித்து மாண்டு போயிருக்கிறார்கள்.அவர்களைக் காப்பாற்றவும் முடியவில்லை.எனவே இது என்னை திகைப்படையச் செய்தது.மகிழ்ச்சிகரமான நேரத்தில் சந்தோஷத்தைக் கொண்டாட வேண்டிய நேரத்தில் இப்படியொரு காரணத்துக்காக ஒரு அசம்பாவிதம் நடந்துவிடக்கூடாது என்பதற்காக எனது முடிவை மாற்றிக்கொண்டு அவர்களுக்காக நான் காதில் தோடு அணிய ஆரம்பித்தேன்.
தினமணி

MGR

MGR songs...