வரி விதிப்பு இல்லா உபரி பட்ஜெட்
12:23 Edit This 0 Comments »சென்னை, ஆக. 4: வரிவிதிப்பு ஏதும் இல்லாத உபரி பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தமிழக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்தார்.
திமுகவினர் இந்த பட்ஜெட் தாக்கலைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
அக்டோபர் மாதம் உள்ளாட்சித் தேர்தல், எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் டூ படிக்கும் மாணவ, மாணவியருக்கு ரொக்கமாக ஊக்கத் தொகை, எம்.எல்.ஏ.க்கள் தொகுதி வளர்ச்சி நிதி அதிகரிப்பு, அரசு கேபிள் டி.வி. செயலாக்கம், பஸ் நிலையங்களில் தனியார் ஒத்துழைப்புடன் வணிக வளாகங்கள் கட்டுதல் உள்ளிட்ட அறிவிப்புகள் இதில் வெளியாகியுள்ளன.
மாநில அரசுக்கான 2011-12-ம் ஆண்டிற்கான திருத்த வரவு செலவுத் திட்டத்தை பன்னீர்செல்வம் சமர்ப்பித்தார். ரூ.8,900 கோடிக்கு புதிய திட்டங்களையும், வளர்ச்சிக்கான திட்டங்களையும் அமைச்சர் அறிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, நடப்பு நிதி ஆண்டுக்கான திருத்திய வரவு செலவுத் திட்டத்தை அதிமுக அரசு இப்போது சமர்ப்பித்துள்ளது.
தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டங்களைச் செயல்படுத்துவது, அவற்றுக்கான நிதி ஒதுக்கீடு ஆகிய தகவல்கள் இந்த பட்ஜெட் உரையில் இடம் பெற்றுள்ளன.
புதிதாக வரி விதிப்பு பற்றியோ, வரி விலக்கு அளிப்பது பற்றியோ எந்த அறிவிப்பும் இந்த உரையில் இடம் பெறவில்லை.
நடப்பு நிதியாண்டில் ரூ.173.87 கோடி உபரி வருவாய் வரும் எனவும், நிதிப் பற்றாக்குறை ரூ.16,881 கோடியாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலதனத் திட்டங்களுக்கான நிதி ரூ.15,877.58 கோடியாக ஒதுக்கப்படுகிறது. நிதிப் பற்றாக்குறையை ஈடு செய்ய நடப்பு நிதியாண்டில் பெறப்படும் நிகரக் கடன் ரூ.17,261 கோடியாக இருக்கும். எனவே ஆண்டின் இறுதியில் அரசுக்கு மொத்தக் கடன் ரூ.1,18,610 கோடியாக இருக்கும்.

0 comments:
Post a Comment