பட்ஜெட் அறிவிப்புகள :

12:28 Edit This 0 Comments »
* மாணவ, மாணவியர் பள்ளிகளில் இடைநிற்றலைக் குறைக்க 10, 11-ம் வகுப்பு படிப்போருக்கு ரூ.1500, 12-ம் வகுப்பு படிப்போருக்கு ரூ.2000 உதவித் தொகை வழங்கப்படும்.

* அடுத்த கல்வி ஆண்டில் இருந்து பள்ளிக் குழந்தைகளுக்கு 4 செட் சீருடைகள் வழங்கப்படும். 6-ம் வகுப்பும் அதற்கு மேலும் பயிலும் மாணவர்களுக்கு அரைக்கால் சட்டைக்குப் பதிலாக முழுக்கால் சட்டையும், மாணவியருக்கு பாவாடை, தாவணிக்குப் பதிலாக சல்வார் கமீசும் வழங்கப்படும்.

* அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு ஏற்கெனவே 4 நகரங்களில் உள்ள தலைமுனையங்கள் மறுபடி செயல்படத் தொடங்குவதுடன், மேலும் 16 மாவட்டங்களில் இந்த நிறுவனம் சார்பில் தலைமுனையங்கள் தொடங்கப்படும். இதுதவிர 11 மாவட்டங்களில் தனியார் தலைமுனையங்களுடன் ஒப்பந்தம் செய்து, ஒளிபரப்பு வசதிக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* எம்.எல்.ஏ.க்களின் தொகுதி வளர்ச்சி நிதி ரூ.2 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

* அடுத்த 5 ஆண்டுகளில் விவசாயிகளின் தனிநபர் வருமானத்தை இரண்டு அல்லது மூன்று மடங்கு உயர்த்த திட்டங்கள் செயல்படுத்தப்படும். நடப்பாண்டில் உணவு உற்பத்தி 115 லட்சம் டன் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

* சென்னையில் புறநகர் காவல்துறை ஆணையரகம், சென்னை மாநகர காவல் ஆணையரகத்துடன் ஒருங்கிணைத்து சென்னை பெருநகர காவல் ஆணையரகமாக உருவாக்கப்படவுள்ளது.

* சென்னை நகருக்கு எதிர்கால குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய சென்னைக்கு அருகே புதிதாக 3 ஏரிகள் உருவாக்குவதுடன், மேலும் சில ஏரிகளை சீரமைத்து நகருக்கு குடிநீர் சப்ளையை அதிகரிக்க ஏற்பாடு செய்யப்படும்.

* ஆவின் மூலமாக 155 நடமாடும் கால்நடை மருத்துவமனைகள் தொடங்கப்பட்டு, 10 கி.மீ. சுற்றளவுக்கு கால்நடை மருத்துவ வசதி அளிக்கப்படும்.

 பிளாஸ்டிக் கழிவில் சாலை அமைக்க ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* 104 அணைகள் ரூ.745 கோடியில் புனரமைக்கப்படும்.

 மோட்டார் வாகனங்கள், உதிரி பாகங்கள் தயாரித்தல், உயிரி தொழில்நுட்பம், மருந்து துறை ஆகியவற்றுக்கென புதிய தொழில் கொள்கை 2011 உருவாக்கப்படும்.

* சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகளுக்கு மூன்று சதவீத வட்டி தள்ளுபடியில் கடன் வழங்கப்படும்.

 மாநிலத்தில் புதிதாக 10 புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படும்.

* நிலங்களை ஒருங்கிணைத்து அனைவரும் பயன்களை பகிர்ந்து கொள்ளும் வகையில், புதிய நில எடுப்புக் கொள்கை உருவாக்கப்படும். திருக்கோயில் அன்னதானத் திட்டம் மேலும் 106 கோவில்களுக்கு விஸ்தரிக்கப்படுகிறது.

* திருச்சி அண்ணல் காந்தி அரசு மருத்துவமனை ரூ.100 கோடியில் சிறப்பு சிகிச்சை மையமாக ஆக்கப்படும்.

 கிராமப்புற இளம்பெண்களுக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படும்.

* விற்பனை வரி நிலுவை, பத்திரப் பதிவுக் கட்டண நிலுவையை வசூலிக்க ""சமாதான் திட்டங்கள்'' தொடங்கப்படும். 2012 மார்ச் வரை இத் திட்டம் இருக்கும்.

* வணிகர் நல வாரிய உறுப்பினராக ஆண்டுதோறும் வணிகர்கள் புதுப்பிப்பதற்குப் பதிலாக ரூ.500 செலுத்தி ஆயுள்கால உறுப்பினராக பதிவு செய்து கொள்ளலாம். மதிப்புகூட்டு வரியில் விலக்கு அளிக்கப்பட்ட சிறு குறு வணிகர்களையும் வாரியத்தில் சேர்க்க அரசு ஆணையிட்டுள்ளது.

* மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்ய தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்படும்.

* முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50 ஆயிரமும், இரு பெண் குழந்தைகளாக இருந்தால் தலா ரூ.25 ஆயிரமும் வைப்புத் தொகை வழங்கப்படும்.

* போக்குவரத்துக் கழகங்களுக்கு கூடுதல் வருவாய் ஏற்படுத்த, தற்போது கணிசமாக நிலம் உள்ள பேருந்து நிலையங்களை, அரசு - தனியார் கூட்டு முயற்சியால் பேருந்து நிறுத்த வசதியுடன் அடுக்கக வணிக வளாகம் கட்டி மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

* நடப்பாண்டில் புதிதாக 3,000 பேருந்துகள் வாங்கப்படும்.

 இலவச மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவையும், இலவச கறவை மாடு மற்றும் ஆடுகள் வழங்குவதும் செப்டம்பர் 15-ல் தொடங்கும்.

* உலமாக்கள் ஓய்வூதியம் ரூ.1000 ஆக உயர்த்தப்படுகிறது.

0 comments:

MGR

MGR songs...